
இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் மீண்டும் தனது காதலுடன் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டதோடு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடகா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர் பாபு. இவரது மகள் ஜெயகல்யாணி. இவர் மருத்துவம் பயின்றுள்ளார். இவர்களது வீட்டில் வேலைபார்த்து வந்தவர் சதீஷ் குமார். இவர் டிப்ளமோ படித்துள்ளார். இந்த நிலையில் சதீஷ்குமாருக்கும் ஜெயகல்யாணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினர். இதை அடுத்து அவரை வீட்டை விட்டு வெளியேறிய ஜெயகல்யாணியை தேடியதில் அவர் மும்பையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சதீஷ் குமார் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்து இருந்தார். மேலும், அமைச்சரால் எனது உயிருக்கும், காதலியின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. என் மீது பொய்யான புகார் அளிக்கிறார்கள், எனது குடும்பத்தை மிரட்டுகிறார்கள் என சதீஷ் குமார் அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இவர்கள் இருவரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 5 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி இருவரும், காரில் செல்லும் போது வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்த வீடியோவில், நாங்கள் இருவரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறோம். எங்களை காப்பாற்ற வேண்டும். தமிழக முதல்வர் எங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஜெயகல்யாணி மற்றும் சதீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். தமிழகத்தில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனது தந்தை அமைச்சர் என்பதால் எங்களை அல்லது காதலனை கொலை செய்திடுவார்கள் என அச்சம் உள்ளது. அதனால் கர்நாடக மாநிலத்தின் உதவியை நாடி வந்துள்ளோம். பெங்களூர் மாநகர ஆணையரிடம் நாங்கள் பாதுகாப்பு வழங்க கூறி புகார் அளித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.