வெத்து வெட்டு... ஊத்திக் கொடுத்து குடியை கெடுத்தவர்.. தினகரனை மிக மோசமாக விமர்சித்த அமைச்சர் சி.வி.சண்முகம்.!

Published : Feb 11, 2021, 05:39 PM IST
வெத்து வெட்டு... ஊத்திக் கொடுத்து குடியை கெடுத்தவர்.. தினகரனை மிக மோசமாக விமர்சித்த அமைச்சர் சி.வி.சண்முகம்.!

சுருக்கம்

நான் நிதானமாக பேசுகிறேனா என்று டிடிவி தினகரன் கேட்கிறார். ஆமாம் இவர்தான் எனக்கு 'ஊத்திக்' கொடுத்தார். அவரோட தொழிலே 'ஊத்திக்' கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் அவர்கள். கூவத்தூரில் எங்களுக்கு அவர்தான் ஊத்திக் கொடுத்தார். இல்லை என்று அவரை சொல்லச் சொல்லுங்கள். 

தினகரன், சசிகலாவை ஒரு போதும் அதிமுகவில் சேர்க்க முடியாது. தினகரனிடம் இருந்து சசிகலாவை காப்பாற்ற வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்;- அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும். முதலில் சசிகலாவுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன். டி.டி.வி. தினகரன் குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். டிடிவி தினகரனை நம்பித்தான் சசிகலா கட்சியையும் ஆட்சியையும் ஒப்படைத்து விட்டுச் சென்றார். ஆனால் அவர் ஒரே மாதத்தில் அதை உடைத்துவிட்டார். 

நான் நிதானமாக பேசுகிறேனா என்று டிடிவி தினகரன் கேட்கிறார். ஆமாம் இவர்தான் எனக்கு 'ஊத்திக்' கொடுத்தார். அவரோட தொழிலே 'ஊத்திக்' கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் அவர்கள். கூவத்தூரில் எங்களுக்கு அவர்தான் ஊத்திக் கொடுத்தார். இல்லை என்று அவரை சொல்லச் சொல்லுங்கள். இனி ஒருபோதும் தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்க்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தற்போதைய அமைச்சர்களில் சசிகலாவுக்கு எதிராக தைரியமாக பேட்டி அளிப்பது அமைச்சர் சி.வி.சண்முகம் மட்டும்தான். இதனால், அதிமுக தொண்டர்கள் மத்தியில் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு மவுசு கூடியுள்ளது. இவர்தான் ஒன்மேன் ஆர்மியாகவும், வீரமான ஆண் மகனாகவும் இருந்து சசிகலாவை எச்சரிக்கை செய்யும் வகையில் பேட்டி அளிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

Trisha: டீலே இதுதான்.! விராலிமலையில் த்ரிஷா போட்டி.?! வெற்றி கனியை தட்டி தருவதாக விஜயபாஸ்கர் உறுதி.!
EPS Meet Sasikala: சின்னம்மா ரிட்டன்ஸ்.! கட்சியை காப்பாற்ற சசிகலாவை சந்திகும் எடப்பாடி.?! மீண்டும் துளிர்க்கும் "இரட்டை இலை" என பறக்கும் மீம்ஸ்.!