டி.டி.வி.,யை குற்றஞ்சாட்ட நினைத்து ஒரு சமுதாயத்தையே கேவலப்படுத்துகிறார் சி.வி.சண்முகம்... நாலாபுறமும் கண்டனம்

By Thiraviaraj RMFirst Published Feb 11, 2021, 5:35 PM IST
Highlights

ஒரு குடும்பத்தை குற்றஞ்சாட்டுவதாக எண்ணி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மிக கேவலமாக, பேசும் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு நாகரீகமற்றது என பலதரப்பில் இருந்தும் கண்டனக்குரல்கள் எழுந்து வருகின்றன. 

ஒரு குடும்பத்தை குற்றஞ்சாட்டுவதாக எண்ணி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மிக கேவலமாக, பேசும் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு நாகரீகமற்றது என பலதரப்பில் இருந்தும் கண்டனக்குரல்கள் எழுந்து வருகிறது.

நான் நிதானமாக பேசுகிறேனா..? என தினகரன் கேட்கிறார். ஆமாம் இவர்தான் எனக்கு ஊத்திக் கொடுத்தார். அவரோட தொழிலே ஊத்திக் கொடுப்பதுதான். ஊத்திக் கொடுப்பது அவர்களது ’குலதொழில்’. ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் அவர்கள். கூவத்தூரில் ஊத்திக் கொடுத்தார்’’என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதற்கு கடும் கண்டனங்கள் கிளம்பி உள்ளன.

’’டி.டி.வி.தினகரனையோ, சசிகலாவையோ அரசியல் ரீதியாக, தனிப்பட்ட ரீதியாக விமர்சித்தால் எங்களுக்கு கவலையும், இல்லை. நாங்கள் கண்டுகொள்ளவும் மாட்டோம். ஆனால், ஒரு குடும்பத்தை குற்றஞ்சாட்டுவதாக எண்ணி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மிக கேவலமாக, பேசும் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு நாகரீகமற்றது. அவர் அளித்த பேட்டியில் ஊத்தி கொடுப்பது தினகரனின் "குல தொழில்" என்று கூறியிருக்கிறார். குலம் என்றால் அவர் சார்ந்த சமூகம்.  இப்படி யாரை குறிப்பிடுகிறார் சி.வி.சண்முகம்..? நாங்கள் சார்ந்த சமூகத்தையும் குலம் என்றே குறிப்பிட்டு இருக்கிறார்.

குடும்ப தொழில் என்றால் ஒரு குடும்பத்தை மட்டுமே சேரும். ஆனால், குல தொழில் என்று கூறியதன் மூலம் குறிப்பிட்ட சமூகத்தினரிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறார். அமைச்சர் என்கிற மாண்பையும் மறந்து அவர் இப்படி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அப்படிப் பார்த்தால் அதிமுகவில் அதே குலத்தை சேர்ந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இருக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ஊத்திக் கொடுத்து தான் அந்தக் கட்சியில் இருக்கிறார்களா?

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இந்தப்பேச்சு இருவேறு சமூகங்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஒரு அமைச்சரே இப்படி பேசுவது தமிழகத்தின் சமூக ஒற்றுமையை சீர்குழைப்பதாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது’’என்கிறார் தேவர் இனப்பாதுகாப்பு பேரவையை சேர்ந்த  கலைமணி அம்பலம்.  

click me!