விழுப்புரத்தில் செம மாஸ் காட்டும் சி.வி.சண்முகம் பிரதர்ஸ்... 2021 தேர்தல் வேலைகள் தீவிரம்...!

By vinoth kumarFirst Published Oct 2, 2020, 3:08 PM IST
Highlights

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்கு முழு மூச்சுடன் பணியாற்றுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவி.சண்முகத்தின் அண்ணணும் நியூஸ் ஜெ நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் இப்போதே தேர்தல் வேலைகள் தொடர்பாக தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்கு முழு மூச்சுடன் பணியாற்றுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவி.சண்முகத்தின் அண்ணணும் நியூஸ் ஜெ நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் இப்போதே தேர்தல் வேலைகள் தொடர்பாக தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. ஆனாலும், முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்கட்சியான திமுகவை விட, அதிமுக தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், செஞ்சி, மயிலம், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் ஆறு தொகுதிகள் இருக்கின்றன. இந்த 6 தொகுதிகளுக்கு ஒரே மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் இருந்து வருகிறார். இந்நிலையியில், இந்த 6 தொகுதிகளிலும் எப்படியாவது சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தீவிரமாக களத்தில் இறங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர். 

இந்நிலையில், விழுப்புரத்தில் அதிமுக இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, 'நியூஸ் ஜெ' நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர், மாவட்ட மாணவரணி செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், விழுப்புரம் நகராட்சி வார்டுவாரியாக இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. மேலும், அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம், கொண்டு சேர்ப்பது மற்றும் வரும் பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு முழு மூச்சுடன் பணியாற்றுவது குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. ஏற்கனவே விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் வெற்றி பெற சிவி.சண்முகத்தின் அண்ணணும் நியூஸ் ஜெ நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!