கண்ணீர்விட்டு கதறி அழுத அதிமுக அமைச்சர் !! உண்மையான விவசாய பாசம் !!

By Selvanayagam PFirst Published Nov 18, 2018, 7:33 AM IST
Highlights

கஜா புயலில் எங்கள் விவசாயிகள் தங்கள் பிள்ளைகள் போல் வளர்த்த, தங்கள் குடும்ப உறுப்னர்களைப்போல் நினைத்த மரங்கள் அழிந்து விட்டனவே என  அமைச்சர் ஓ.எஸ். மணியன், கதறி அழுத சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான கஜா புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் நாகை – வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. அப்போது 110 கி.மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி  வீசியது. கஜாவின் இந்த கோர தாக்குதலில் நாகை, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

35 க்கும் மேற்பட்டோர் இந்த புயலில் உயிரிழந்தனர். ஒரு லட்சத்துக்கும்  அதிகமான மரங்கள் வேறோடு சாய்ந்தன. 30 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன. 1 லட்சத்து 70 ஆயிரம் பொது மக்கள் இன்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கஜா புயலால் நாகபட்டினம் முத்ல் கோடியக்கரை வரை  அதிக அளவு பாதிக்கப்பட்டது.  ஒரு லட்சத்துக்கு அதிகமான தென்னை, மா, முந்திரி, சவுக்கு போன்ற மரங்கள் வேறோடு சாய்ந்தன. நூற்றக்கும் மேற்பட்ட கிராமங்கள் இன்னும் இருளில் மூழ்கிக்கிடக்கின்றன. பல இடங்களில் இன்னும் முழு அளவில் சீரமைப்புப் பணிகள் முடிவடையவில்லை.

தொடர்ந்து தமிழக அரசு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் கிடைக்க இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என கூறப்படுகிறது.

இந்த கஜா புயல் கரையைக் கடந்த நள்ளிரவிலும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஓ.எஸ். மணியன் பாதிக்கப்பட்ட மக்களின் கூடவே இருந்தார். அந்த மாவட்டத்தில்  உள்ள அனைத்து நிவாரண முகாம்களுக்குச் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

புயல் கரையைக் கடந்து சென்ற பின் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கார், பைக் என கிடைத்த  வாகனத்தில் சென்று சேத பகுதிகளை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் நாகை முதல் கோடியக்கரை வரை, மிக மோசமான, கொடூரமான பேயாட்டம் ஆடிவிட்டு சென்றுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

ஏராளமான குடியிருப்புகளை முற்றிலும் அழித்துவிட்டு சென்றதாக தெரிவித்த அமைச்சர் தென்னை, மா, சவுக்கு, முந்திரி என பணப் பயிர்களை முற்றிலும் அழிந்துவிட்டது என  குறிப்பிட்டார். கிட்டத்தட்ட 80 சதவீத மரங்கள் அழிந்துவிட்டதாக கூறினார்.

தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து விட்ட அந்த விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க கட்டாயம் நடவடிக்கை எடுக்கப் போவதாக ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கஜா புயலில் எங்கள் விவசாயிகள் தங்கள் பிள்ளைகள் போல் வளர்த்த, தங்கள் குடும்ப உறுப்னர்களைப்போல் நினைத்த மரங்கள் அழிந்து விட்டனவே என  அமைச்சர் ஓ.எஸ். மணியன், கதறி அழுதார்.

இந்த மக்களுக்கு என்ன வேண்டுமோ அதை நான் கண்டிப்பாக வாங்கித் தருவேன் என கண்ணீருடன் அவர் குறிப்பிட்டார். ஒரு விவசாயியான அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தங்கள் மரங்களை இழந்து நிற்கும் விவசாயிகளை நினைத்து கண்ணீர்விட்டு அழுதது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது

click me!