தீயாய் வேலை செய்யும் அமைச்சர் விஜயபாஸ்கர்..!

By thenmozhi gFirst Published Nov 17, 2018, 8:17 PM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டம் கந்தார்வக்கோட்டை தாலுக்கா மாட்டாங்கல் பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களோடு மக்களாக சாதாரண டீ கடையில் அமர்ந்து டீ குடிக்கும் போது கூட, கஜா பாதிப்பு குறித்து பேசிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தார்வக்கோட்டை தாலுக்கா மாட்டாங்கல் பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களோடு மக்களாக சாதாரண டீ கடையில் அமர்ந்து டீ குடிக்கும் போது கூட, கஜா பாதிப்பு குறித்து பேசிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

கஜா புயலால் வேதாரண்யம், நாகப்பட்டினம் கடலூர் புதுகோட்டை திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில்  பெருமளவு சேதம் ஏற்பட்டு உள்ளது.

ஐம்பதிற்கும் மேலான நபர்கள் இறந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தனைக்கும் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தே இவ்வளவு சேதம் என்றால் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்ததால் எந்த அளவிற்கு உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டு இருக்கும் என்பதை நம்மால்  நினைத்து கூட பார்க்க முடியாது.

அந்த வகையில், களத்தில் இறங்கி மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் அமைச்சர்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முதல் அமைச்சர் ஜெயகுமார், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் சம்பத், அமைச்சர் வேலுமணி, அமைச்சர் தங்கமணி, அமைச்சர் கருப்பணன் என பட்டியல் நீள்கிறது.
 


இதில் சுகாதாரத்துறை செயலள்ளர் ராதா கிருஷ்ணன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவ ரீதியாக அவர்களுக்கு தேவையான நடமாடும் மருத்துவ குழுக்களை அமைத்து மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களோடு மக்களாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தார்வக்கோட்டை தாலுக்கா மாட்டாங்கல் உள்ள ஒரு டீ கடையில் அமர்ந்து கொண்டு, டீ குடிக்கும் போது கூட அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தார். இன்னும் சொல்லப்போனால் அமைச்சர்கள் தீயாய் வேலை செய்து வருகின்றனர்.

click me!