சசிகலா குறித்து நெகிழ்ச்சியாக பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ.. சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு அதிரடி பதில்.

By Ezhilarasan BabuFirst Published Jan 21, 2021, 10:24 AM IST
Highlights

ஸ்டாலின் தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் சொல்வதே அவச்சொல் தான், சசிகலாவை கட்சியின் இணைத்துக்கொள்வது குறித்தும், அவர் விடுதலையானால் அவரை சந்தீப்பீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லோரும் உறவோடு தான் இருந்தோம், 

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின்  விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. அதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மொத்தம் 2 கோடியே 8 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு  கடந்த 13 ம் தேதி வரை மொத்தம் 2 கோடியே 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசை வாங்கிவிட்டனர்.98.50 சதவீதம் வரை பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழக அரசின் பணிகளை எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆய்வு செய்கின்றனர். நன் ஒன்றை கேட்கிறேன், திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய முடியுமா? அப்படி ஆய்வு செய்ய அனுமதித்த அரசு அதிகாரிகள் நிம்மதியாக பணியாற்றினார்களா? என்பதை மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். 

ஸ்டாலின் தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் சொல்வதே அவச்சொல் தான், சசிகலாவை கட்சியின் இணைத்துக்கொள்வது குறித்தும், அவர் விடுதலையானால் அவரை சந்தீப்பீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லோரும் உறவோடு தான் இருந்தோம், ஜெயலலிதா இருந்தபோது உறவோடு தான் இருந்தோம், இனிமேல் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி அமைய அனைவரும் உறுதுணையாக இருந்து உழைப்போம் என்று கூறினார்.
 

click me!