திமுகவுக்குனா 20 தொகுதி…. அதிமுகவுக்குனா 12 தொகுதி…. இது இடைத் தேர்தல் கணக்கு… மினி பொதுத்தேர்லுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றபோவது யார் ?

By Selvanayagam PFirst Published Oct 29, 2018, 9:00 AM IST
Highlights

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து காலியாக உள்ள 18 + 2 = 20 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெற்றால் யாருக்கு எத்தனை தொகுதிகள்  கிடைக்கும் என கணக்கும் போடும் அரசியல்வாதிகள், 20 தொகுதிகளிலும் திமுக ஜெயித்தால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும், அதிமுக குறைந்து 12 தொகுதிகளைக் கைப்பற்றினால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என பரபரப்பு தகவல்கள் நிலவுகின்றன.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் ஜனவரிக்குள் இடைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ககப்படுகிறது. இதை தமிழக மக்கள் ஒரு மினி பொதுத் தேர்தலாகத்தான் பார்க்கிறார்கள். தற்போது உள்ள நிலவரப்படி இதில், 11 தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., இடையே, மும்முனை போட்டியும், இரண்டில், அ.தி.மு.க., - அ.ம.மு.க., இடையே நேரடி மோதலும், மீதமுள்ள, ஏழு தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே கடும் போட்டியும் இருக்கலாம் என, தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், நாங்கள் போட்டியிட தயார்' என, டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக சென்னை, அறிவாலயத்தில் நடந்த, திமுக  மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பேசிய  ஸ்டாலின் , 20 தொகுதிகளை கைப்பற்றி, திமுக  ஆட்சி அமைக்கும்; தேர்தல் பணிகளில் ஈடுபடுங்கள்' என, கட்சியினரை முடுக்கி விட்டுள்ளார்.



அதேபோல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில்,நடற்த  ஆலோசனை கூட்டத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளில் , குறைந்தது 12 தொகுதிகளை கைப்பற்றி, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர், திருப்பரங்குன்றம், நிலக்கோட்டை, மானாமதுரை, பரமக்குடி, சாத்துார், தஞ்சாவூர், பெரம்பூர், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிப்பெட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய, 11 தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., இடையே, மும்முனை போட்டிக்கு வாய்ப்பு உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

விளாத்திகுளம், ஆம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், அரூர் ஆகிய, ஏழு தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே, நேரடி போட்டி நிலவலாம் எனவும் தெரிகிறது.. 

பெரியகுளம், ஆண்டிப்பட்டியில், அ.தி.மு.க., - அ.ம.மு.க., இடையே தான் போட்டி. தகுதி நீக்கம் அடிப்படையில், பதவி இழந்த, 18 பேரையும் மீண்டும் போட்டியிட செய்து, தொகுதி மக்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் பெற, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதே போல், 20 தொகுதிகளிலும் திமுக  வெற்றி பெற்றால், அக்கட்சியின் தலைமையில், புதிய ஆட்சி அமைக்க முடியும் என்பதால், 20 தொகுதி களையும் கைப்பற்ற, தி.மு.க.,வும் தயாராகி உள்ளது. 

அதிமுக தரப்பில், ஆட்சியை தக்க வைக்க, 12 இடங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இடைத் தேர்தல் முடிந்த பிறகு எடப்பாடி அரசு நீடிக்குமா? அல்லது திமுக ஆட்சி வருமா? அல்லது மீண்டும் ஒரு பொதுத் தேர்தலா ? காலம்தான் பதில் சொல்லும்.

 

click me!