மினி கிளினிக் திறப்பு விழா... குழந்தையாக மாறிய சுட்டி தனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

By vinoth kumarFirst Published Dec 20, 2020, 6:03 PM IST
Highlights

விருதுநகரில் மினி கிளினிக் திறப்பு விழாவில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ரிப்பன் வெட்டுவதற்கு முன்னதாக நுழைவு வாசலில் தொங்க விடப்பட்டிருந்த அலங்கார பலூன்களை கத்திரிக்கோலால் குத்தி உடைத்து விளையாடியது சிரிப்பை ஏற்படுத்தியது.
 

விருதுநகரில் மினி கிளினிக் திறப்பு விழாவில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ரிப்பன் வெட்டுவதற்கு முன்னதாக நுழைவு வாசலில் தொங்க விடப்பட்டிருந்த அலங்கார பலூன்களை கத்திரிக்கோலால் குத்தி உடைத்து விளையாடியது சிரிப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவில் அதிரடியாக பேசக்கூடியவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பரபரப்பான பதிலைச் சொல்லி சர்ச்சையைக் கிளப்பி விடுவார். எதிர்கட்சியினர் மட்டுமில்லாமல், அதிமுகவினரே முகம்சுழிக்கும் அளவிற்கு சில சமயங்களில் அமைந்துவிடும் அவரின் பேச்சு. எந்த அளவிற்கு அதிரடியாகப் பேசுவாரோ அந்த அளவிற்கு காமெடியாகவும் பேசி சுற்றியிருப்பவர்களைச் சிரிக்க வைத்துவிடுவார். 

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யனார் காலனியில் மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரிப்பன் வெட்டி மினி கிளினிக்கை துவக்கி வைத்தார். அப்போது, நிலைப்பகுதியில் பலூன்களை அழகுக்காக கட்டி வைத்திருந்தனர். ரிப்பனை வெட்டித் துவக்கிய கத்தரிக்கோலை கையில் வைத்திருந்த அமைச்சர், திடீரென அங்கு தோரணமாக நிலைப்பகுதியில் தொங்கிய பலூன்களை ஒவ்வொன்றாக சிறு குழந்தைகள் விளையாடுவது போல, கத்தரிக்கோலை கொண்டு குத்திக் குத்தி உடைத்து விளையாடினார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

அமைச்சரின் இந்த விளையாட்டுத்தனத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. மாவட்ட ஆட்சியர் கண்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கட்சியினர் உள்ளிட்டோர் வேடிக்கையாகப் பார்த்தனர். அமைச்சரின் பலூன் விளையாட்டு, சிரிப்பையும், முகச்சுழிப்பையும் ஏற்படுத்தியது.

click me!