ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி அமைத்தால் ரொம்ப சந்தோஷம்... பொன்.ராதாகிருஷ்ணன் சரவெடி..!

Published : Dec 20, 2020, 05:24 PM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி அமைத்தால் ரொம்ப சந்தோஷம்... பொன்.ராதாகிருஷ்ணன் சரவெடி..!

சுருக்கம்

சட்டப்பேரவை தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி அமைத்தால் வாழ்த்துகள் என பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சட்டப்பேரவை தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி அமைத்தால் வாழ்த்துகள் என பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன்;- ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் வாழ்த்துக்கள். தேர்தல் யார் யாருடன் இருக்கிறார்கள் என்று பார்ப்போம். பாஜகவில் தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். அதிமுகவை நிராகரிப்போம் என்ற திமுகவின் பயணத்தில் திமுகவை நிராகரிப்போம் என்று கூறுவார்கள். விவசாயிகளையும், கிராமங்களையும் பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை. 

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து பொன்னார் கூறுகையில்;- நாட்டின் முதுகெழும்பாக உள்ள விவசாயிகளுக்கான வருவாய் இரட்டிப்பு அடையவும், விவசாயிகளின் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் பல திட்டங்கள் பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்டு உள்ளது.

 

வேளாண்சட்டங்கள், சந்தைப்படுத்துதலில் விவசாயிகள் ஏமாற்றப்படுவதையும் நஷ்டப்படுவதையும் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இதை பாஜக மட்டும் கூறவில்லை, 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியும் திமுகவும் இதே சட்டத்தை பற்றி கூறினார்கள், ஆனால் அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?