தடவுறதுல என்ன தப்பு இருக்கு..? எம்.ஜி.ஆர்- லதாவை கோர்த்துவிட்ட கஸ்தூரி..!

Published : Apr 10, 2019, 04:05 PM IST
தடவுறதுல என்ன தப்பு இருக்கு..? எம்.ஜி.ஆர்- லதாவை கோர்த்துவிட்ட கஸ்தூரி..!

சுருக்கம்

எம்.ஜி.ஆர்-லதா காதல் கட்சிகளில் நடித்தது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரி பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.    

எம்.ஜி.ஆர்-லதா காதல் கட்சிகளில் நடித்தது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரி பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.  

நேற்று சிஎஸ்கே அணியும், கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணியும் மோதிய டி.-20 போட்டியில் சிஎஸ்கே அணி 14 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ’என்னய்யா இது  . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.  #CSK  81 -3  (14 overs)’ என பதிவிட்டு இருந்தார் நடிகை கஸ்தூரி. இதுதான் சமயம் என சமூக வலைதள போராளீஸ் அவரை வறுத்தெடுத்து விட்டனர். 

 

கமெண்டுகளால் கடுப்பாகி போன கஸ்தூரி அடுத்த பதிவில், ’’என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல  வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. எம்.ஜி.ஆர் காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது?இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்.’’ என மன்னிப்பு கோரினார்.

 

இது தொடர்பாக முகநூல் பக்கத்திலும் மிகப்பெரிய விளக்கமளித்துள்ளார். ‘’எம்.ஜி.ஆர் காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இதில் கண்ணியமும் பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.

புரட்சி தலைவர் ஒப்பற்ற தலைவர், தொண்டர்களின் இதயதெய்வம் என்பது எவ்வளவு உண்மையோ, நான் விரும்பும் நவரசகலைஞன் என்பதும் உண்மை. தெய்வத்தை இழிவுபடுத்தி விட்டேன் என்ற குற்றசாட்டை வன்மையாக மறுக்கிறேன். காமம் இழிவு, உடல் ரீதியான வெளிப்பாடுகள் தமிழ் கலாச்சாரத்திற்கு குறைவு என்ற மனப்பான்மையே இதற்கு காரணம். இந்து மத தெய்வங்கள் கூட காதல் லீலை புரிந்தவர்கள்தான்.

உடனே அமைதிப்படை அல்வா , தத்தோம் தகதிமி தோம் என்று தூக்கி கொண்டு வருபவர்களுக்கு - நான் மிகவும் அற்பணிப்புடன் நடித்த காட்சிகள் அவை. பொய்யாக அழுவது சுலபம். ஆக்ரோஷமாக நடிப்பது சுலபம். ஆனால் கவர்ச்சியை வெளிப்படுத்த மிகுந்த திறமையும் உழைப்பும் தேவை.

எம்.ஜி.ஆர் அவர்களை தலைவராகவும், தெய்வமாகவும் மட்டும் பார்த்து நடிகராக அவர் வரலாற்றை மறைப்பது ரசிகனுக்கு அழகல்ல.
இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!