
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் பிரம்மாண்ட சிறப்பு நினைவு மண்டபம் கட்டப்படும் எனவும், சர்வதேச அளவில் கட்டட கலை நிபுணர்களிடம் வரைபடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும் எனவும், சென்னையில் 6 வழி வெளிவட்ட சாலைப்பணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
திருவொற்றியூர் மேம்பாலம் இரு வாரத்தில் திறக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்தார்.