கேள்வி நேரத்தின்போது செல்போனில் ஆபாசபடம் பார்த்த காங்கிரஸ் உறுப்பினர். வச்சு செய்யும் பாஜக.

By Ezhilarasan BabuFirst Published Jan 30, 2021, 11:33 AM IST
Highlights

எனது கேள்விக்கு டிஜிட்டலின் பதில்கள் அனுப்பியிருந்தன, அந்த பதில்களை நான் செல்போனில் தேடிக்கொண்டிருந்தேன், நாங்கள் சொல்வதுபோல  நான் எந்தவிதமான ஆபாச வீடியோவையும் பார்க்கவில்லை. தெரியாமல் ஏதாவது அப்படி வீடியோவை பார்த்து இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.  

காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மேல்சபை உறுப்பினராக உள்ள பிரகாஷ் ரத்தோட் மேல் சபையில் கேள்வி நேரத்தின்போது ஆபாச வீடியோ பார்த்ததாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே கர்நாடகத்தில் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் காங்கிரசுக்கு இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அவர் ஆபாச வீடியோ பார்த்ததற்கான ஆதாரத்துடன் கன்னட செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டிருப்பது அம்மாநில மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் எழுப்பி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் மன்றங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்,  வெறுமனே பொழுதுபோக்கு இடமாக மன்றங்களை பாவிப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்த வரிசையில் கர்நாடக மேல்சபையில் காங்கிரஸ் கட்சி பிரதிநிதி ஆபாசபடம் பார்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது கர்நாடக மாநில மேல்சபைக் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பிரகாஷ் ரதோட் தனது செல்போனில்  வீடியோ பார்த்ததாக தெரிகிறது. அதில் சில ஆபாச காட்சிகள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது. இதை மேல் சபையில் இருந்த செய்தி சேனல்கள் பதிவு செய்துள்ளன. ஆனால்  அதையும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து அந்தக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து கூட்டம் முடிந்த பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குள் அவர் ஆபாச படம் பார்த்ததற்கான  காட்சிகள் தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் ரதோட், எனது செல்போனில் நிறைய வீடியோக்கள் இருந்தன, அதை நான் டெலிட் செய்து கொண்டிருந்தேன். 

எனது கேள்விக்கு டிஜிட்டலின் பதில்கள் அனுப்பியிருந்தன, அந்த பதில்களை நான் செல்போனில் தேடிக்கொண்டிருந்தேன், நாங்கள் சொல்வதுபோல  நான் எந்தவிதமான ஆபாச வீடியோவையும் பார்க்கவில்லை. தெரியாமல் ஏதாவது அப்படி வீடியோவை பார்த்து இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார். அவரின் இந்த நடவடிக்கையை அவையிலிருந்த பாஜகவினர் கடுமையாக  எதிர்த்தனர். உடனே அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பிரகாஷ் ரதோடின்  நடவடிக்கை  தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில்  கர்நாடக மாநில சட்டசபையில் ஆபாச படங்கள்  பார்க்கும் விவகாரம் இது முதல்முறை அல்ல. 

எடியூரப்பா முதல்-அமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சர்கள் லட்சுமணன் சவதி,  கிருஷ்ணா பாலேமர்,  சிசி பட்டீல், ஆகிய மூன்று அமைச்சர்கள் சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறி அவர்கள் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே இதுபோன்ற விவகாரங்கள் கர்நாடக மாநிலத்திற்கு புதிதல்ல என சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கிழித்து வருகின்றனர்.
 

click me!