மேகேதாட்டு அணை விவகாரம்... டெல்லி போய் மதுரை கோர்ட் வரத்துடிக்கும் பசவராஜ் பொம்மை..!

Published : Aug 26, 2021, 10:46 AM IST
மேகேதாட்டு அணை விவகாரம்... டெல்லி போய் மதுரை கோர்ட் வரத்துடிக்கும் பசவராஜ் பொம்மை..!

சுருக்கம்

தென்னிந்திய நதிகளை இணைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைக்க இடையீட்டு மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மீண்டும் சந்தித்துப் பேசினார். மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி தரும் என அவர் தெரிவித்தார். நேற்று டெல்லியில் நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சருடன் கர்நாடக முதலான்ச்சர் பசவராஜ் பொம்மை இருவரும் சந்தித்தனர். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மத்திய நீர்வளத் துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து மேகதாது உள்ளிட்ட கர்நாடகத்தின் நீர் வளம் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டும் கர்நாடக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், தென்னிந்திய நதிகளை இணைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைக்க இடையீட்டு மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!