ஊடக விவாதங்களில் இவர்கள்தான் கலந்து கொள்ள முடியும்... திமுக தலைமை கழகம் அறிவிப்பு!

Published : Oct 15, 2018, 05:32 PM ISTUpdated : Oct 15, 2018, 05:39 PM IST
ஊடக விவாதங்களில் இவர்கள்தான் கலந்து கொள்ள முடியும்... திமுக தலைமை கழகம் அறிவிப்பு!

சுருக்கம்

ஊடகங்களில் திமுக சார்பில் விவாதங்கள் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்பவர்கள் குறித்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் வெளியானவர்களின் பெயர்களைத் தவிர வேறு யாரும் திமுக சார்பில் பங்கேற்க கூடாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் க.பொன்முடி எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா, கழக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., தேர்தல் பணிக்கழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பழ.கருப்பையா ஆகியோரின் பெயர்களை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

தற்போது திமுகவில் எந்த பதவியும் வகிக்காத பழ.கருப்பையாவின் பெயர் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பழ.கருப்பையா, அதிமுகவுக்கு எதிராக கருத்துக்களைக் கூறியதால், அதிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார். இந்த நிலையில்தான் அவருக்கு ஊடக விவாதங்களில் பங்கேற்க திமுக தலைமை கழகம் அனுமதி அளித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!