
சசிகலாவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு அழைப்பு விடுத்து, ஜெயா ப்ளஸ் சேனல் மட்டும் போயஸ் கார்டன் சென்றது. மற்ற சேனல்கள் அனைத்தும், மாபா பாண்டியராஜனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஓ.பி.எஸ். வீட்டுக்கு சென்றன.
கடந்த 5ம் தேதி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர், அதிமுக பொது செயலாளர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதையடுத்து அனைத்து எம்எல்ஏக்களையும் சொகுசு பஸ்களில் ஏற்றி கொண்டு சென்றனர்.
அவர்களை காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோல்டன் பே எனப்படும் தனியார் விடுதியில் அடைக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
இன்று காலை கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் எம்பிக்கள் அசோக்குமார், பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் நேரில் சென்று, ஓ.பி.எஸ்ஸுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதைதொடர்ந்து சத்யபாமாவும் ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மக்களின் கருத்தை கேட்டு நல்ல முடிவை எடுப்பேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
இதை தொடர்ந்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்ற மாபா பாண்டியராஜன், தனது அதரவை தெரிவித்தார்.
மாபா பாண்டியராஜன், முதல்வர் ஓ.பி.எஸ். சந்திப்பதை அறிந்ததும், அனைத்து டி.வி. சேனல்களும், பத்திரிகையாளர்களும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன் திரண்டனர்.
அதேவேளையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், ஒ.பி.எஸ்.சை சந்திப்பதை அறிந்ததும், அதிமுக பொது செயலாளர் சசிகலா, பத்திரிகை யாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், அங்கு ஜெயா ப்ளஸ் சேனல் மட்டுமே உள்ளது. மற்ற சேனல்கள் அனைத்தும், ஓ.பி.எஸ். வீட்டின் முன் திரண்டுள்ளது.
அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு, போயஸ் கார்டனில் ஏற்பாடு செய்தார். இதனை அனைத்து டிவி சேனல்களும் புறக்கணித்துள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.