மெர்சல் காட்டும் மதிமுக..! யாரும் எதிர்பாராத தேர்தல் அறிவிப்பு..!

By ezhil mozhiFirst Published Mar 20, 2019, 4:08 PM IST
Highlights

மதிமுக தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.
 

மதிமுக தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் திமுக தலைமையிலிலான கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு 1 தொகுதி மட்டுமே வழங்கப்பட்டது. காங்கிரஸ் 10 தொகுதியிலும், திமுக 20 தொகுதியிலும் போட்டியிட உள்ளது. மற்ற கூட்டணி கட்சியினருக்கு தலா 2 தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ள ஈரோடு தொகுதியில், அக்கட்சியின் பொருளாளராக உள்ள கணேச மூர்த்தி வேட்பாளர் என ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தேர்தல் அறிக்கையை அறிவித்து உள்ளது மதிமுக. அதன் படி, 

சிறுபான்மையினர் நலன் காக்கபடவேண்டும்

பொது சிவில் சட்டம் கூடாது

மீனவர் நலன் காக்கபட வேண்டும்

மின்சார சட்ட திருத்த முன்முடிவு 2018ஐ திரும்பபெற வேண்டும்

இணையதள வணிகத்திற்கு தடை

ஸ்டெர்லைட் ஆலை அகற்றபட வேண்டும

நீயூட்ரினோவிற்கு தடை விதிக்க வேண்டும் 

சீமை கருவேல மரங்கள் அழிக்கபடவேண்டும்

மணல் கொள்ளைகள் தடுக்க படவேண்டும்

விடுதலை புலிகள் மீதான தடை நீக்க வேண்டும்

தமிழ் ஈழம் மலர பொது வாக்கெடுப்பு 

ஏழு தமிழர் விடுதலை செய்ய வேண்டும் 

மரண தண்டனை கூடாது

என மதிமுக தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 
 

click me!