’மு.க.ஸ்டாலின் மீது கருணாநிதிக்கே நம்பிக்கை இல்லை...’ அதிரடி பேச்சு..!

By Thiraviaraj RMFirst Published Mar 20, 2019, 4:05 PM IST
Highlights

'மகன் மீது நம்பிக்கை இல்லாததால்தான் கருணாநிதி வாய் பேசாத நிலையிலும் ஸ்டாலினை தலைவராக்கவில்லை' என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 

'மகன் மீது நம்பிக்கை இல்லாததால்தான் கருணாநிதி வாய் பேசாத நிலையிலும் ஸ்டாலினை தலைவராக்கவில்லை' என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசினார். அப்போது, "பாஜக என்றால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பிரபலமான கட்சியுடன் கூட்டணி. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாம் நிம்மதியாக வாழ முடியும். பாமக, தேமுதிக என பட்டி தொட்டியெல்லாம் தெரிந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

நேரத்திற்கு நேரம் நிறம் மாற்றிக்கொள்ளும் கட்சி திமுக. வாக்கு வங்கி அதிகமாக உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு பெருமிதம் அடைந்துள்ளோம். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் மிகப் பெரிய கட்சிகள். எதிரணியில் உள்ள வைகோ, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.

எதிரணியில் உள்ள ஸ்டாலின் கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை செயல் தலைவராகவே இருந்தார். கருணாநிதி வாய் பேசாத நிலையிலும் ஸ்டாலினை தலைவராக்கவில்லை. தந்தைக்கே மகன் மீது நம்பிக்கை இல்லாதபோது, ஸ்டாலினை மக்கள் எவ்வாறு நம்புவார்கள். பச்சோந்திகள் கூட நேரம் பார்த்துதான் நிறம் மாறும். ஆனால், திமுக நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி மாறுகிறது. 12 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்காக என்ன திட்டங்களைக் கொண்டு வந்தது?

தமிழகம் வளம் பெற தமிழக மக்கள் நலம் பெற மத்தியில் நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் அதிமுக வலிமையான கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. சில சதிகாரர்களால் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அந்த 18 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று சதிகாரர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்’’ என அவர் தெரிவித்தார். 

click me!