வைகோ மகனுக்கு முக்கிய பதவி.. மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் விலகல்..!

By vinoth kumarFirst Published Oct 21, 2021, 11:25 AM IST
Highlights

துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் அவருக்கு பதவி அளிக்க வேண்டும் என்று மதிமுக தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், வாரிசு அரசியலை எதிர்த்தே திமுகவில் இருந்து வெளியே வந்த தான், தனது கட்சியிலும் வாரிசை கொண்டுவருவதா என்ற விமர்சனத்துக்கு உள்ளாகி விடும் என்று உண்மையிலேயே வைகோ அஞ்சினார்.

வைகோ மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கியதையடுத்து அதிருப்தி தெரிவித்து மதிமுக மாநில இளைஞரணி செயலர் ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் அவருக்கு பதவி அளிக்க வேண்டும் என்று மதிமுக தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், வாரிசு அரசியலை எதிர்த்தே திமுகவில் இருந்து வெளியே வந்த  தான், தனது கட்சியிலும் வாரிசை கொண்டுவருவதா என்ற விமர்சனத்துக்கு உள்ளாகி விடும் என்று உண்மையிலேயே வைகோ அஞ்சினார். மேலும், சில மதிமுக நிர்வாகிகள் மறைமுகமாக எதிர்ப்பையுத் தெரிவித்திருந்தனர். ஆனால், மாவட்டச் செயலாளர்கள் துரை வையாபுரிக்கு அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என திட்டவட்டமாக கூறிவந்தனர். 

இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், நேற்று உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், நடந்த ரகசிய வாக்கெடுப்பில், வைகோ மகன் துரை வையாபுரி தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, மதிமுகவிலும் வாரிசு அரசியல் தலை தூக்கப்படுகிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், துரை வையாபுரி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தக் கட்சியின் இளைஞரணி செயலாளராக இருந்த ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்குகிறேன். இது அரசியல் இயக்கமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

click me!