பணிகளை சரியான முறையில் செய்ய முடியாத காரணத்தால் பதவியை ராஜினாமா செய்யும் மனநிலைக்கு வந்துவிட்டதாக மதுரை தெற்கு தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமி நாதன் குறிப்பிட்டார்.
சொந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே அரசுக்கு எதிராக பேசியிருப்பது திமுகவினர் வெட்கப்பட வேண்டிய அவமானகரமான நிலை என நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சியானது நடைபெற்று வருகிறது. முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். இந்நிலையில் மதுரை மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகளை முன் வைத்தனர். அப்போது மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வருகை தந்த மதுரை தெற்கு தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமி நாதன் பேச அனுமதி கேட்டார்.
இதையும் படிங்க;- திமுக அமைச்சரின் மருமகனை தட்டித்தூக்கிய இபிஎஸ்... அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!
இதனையடுத்து பூமிநாதன் பேச மேயர் இந்திராணி அனுமதி வழங்கினார். தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும், இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்த நிலையில் எந்த பணியும் நடைபெறவில்லையென கூறினார். இதன் காரணமாக பொதுமக்கள் தன்னை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் நிலை இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் தனது தொகுதி பக்கமே தன்னால் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் வேதனையோடு குறிப்பிட்டார். மேலும் மக்களுக்கு சேவை செய்யதான் எம்எல்ஏ பதவிக்கு வந்ததாகவும், ஆனால் பணிகளை சரியான முறையில் செய்ய முடியாத காரணத்தால் பதவியை ராஜினாமா செய்யும் மனநிலைக்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டார். ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள எம்எல்ஏ ஒருவர் இதுபோன்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க;- பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்..! திமுக அரசு மீது குற்றச்சாட்டு கூறிய மதிமுக எம்எல்ஏவால் பரபரப்பு
இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தொகுதி பிரச்சினைகளை பல முறை வலியுறுத்தியும் தமிழக அரசு நிறைவேற்றுவதில்லை என்பதால் ராஜினாமா செய்வதாக மதுரை தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் தெரிவித்திருப்பது, திமுக ஆட்சிக்கு விடப்பட்டிருக்கிற எச்சரிக்கை மணி.
தொகுதி பிரச்சினைகளை பல முறை வலியுறுத்தியும் தமிழக அரசு நிறைவேற்றுவதில்லை என்பதால் ராஜினாமா செய்வதாக மதுரை தெற்கு தொகுதி தி மு க சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் தெரிவித்திருப்பது, தி மு க ஆட்சிக்கு விடப்பட்டிருக்கிற எச்சரிக்கை மணி. சொந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே அரசுக்கு(1/2)
— Narayanan Thirupathy (@narayanantbjp)
சொந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினரேஅரசுக்கு எதிராக பேசியிருப்பது திமுகவினர் வெட்கப்பட வேண்டிய அவமானகரமான நிலை. திமுக ஆட்சியில் மக்கள் நலன் புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். மதிமுகவில் இருந்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.