எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை... ஓரிரு நாளில் கலந்தாய்வு தேதி.

By Ezhilarasan BabuFirst Published Nov 2, 2020, 2:57 PM IST
Highlights

அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 1,800 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. 

தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன. 

அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 1,800 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் மாநில இட ஒதுக்கீட்டின் கீழ் 977 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 562 இடங்களும் நிரப்பப்படுகின்றன். 

அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டு உள்ள நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருக்கும் நிலையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த மருத்துவத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. நவம்பர் 18ம் தேதிக்கு முன்னதாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு ஏதுவாக ஓரிரு நாளில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
 

click me!