திமுகவை சீண்டும் மாரிதாஸ்... கிஷோர் கே.சாமிக்கு அடுத்து கைது டார்க்கெட்..?

By Thiraviaraj RMFirst Published Jun 25, 2021, 4:49 PM IST
Highlights

திமுக மீது தவறான பார்வையை புகுத்துவதாகவும், மு.க.ஸ்டாலினின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், அவரது சமூக வலைதள பதிவுகளை நீக்குவதோடு மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

திமுகவை விமர்சித்தும், வக்கிரமாகவும் பேசி வந்த கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்து திமுகவிற்கு எதிரான விமர்சகர் மாரிதாஸும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

சமீபத்தில் மாரிதாஸ் சமூக வலைதளங்களில் திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். ’’பெட்ரோல் டீசல் விலை குறைக்க முடியாது - திமுக நிதி அமைச்சர் : 2 மாதம் முன் டீசல் பெட்ரோல் 5,10 குறைப்போம் என்ற வாக்குறுதி கொடுத்தது திமுக தான்... ஆக இதுவும் நீட் தேர்வு போல் அல்வா தான்! மாணவர்கள் பாதி நூற்றாண்டாக மக்களின் ஆசையைத் தூண்டி ஏமாற்றி கொள்ளை அடிக்க திமுக தவிர யாராலும் முடியாது. திமுக அமைச்சர் கூறிவிட்டார் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயார் ஆகவும். திமுக ஏமாற்றுகிறது என்று நான் சொன்னது தற்போது உண்மை எனப் பெற்றோர்கள் புரிந்து கொள்வர். இப்போதும் கூறுகிறேன், திமுக 100% ஏமாற்றும் நோக்கத்தோடு தான் தெரிந்தே முதல் கையெழுத்து நீட் ரத்து எனப் பிரச்சாரம் செய்தது.

"திமுக வாக்குறுதி கொடுத்தது போல் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நீட் தேர்வு ரத்து ஆகவில்லை என்றால் MLA பதவியை திமுகவினர் ராஜினா செய்வர்" என்று ஸ்டாலின், உதயநிதி கூற முடியுமா? என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, "ஜெய் ஹிந்த். வாழ்க பாரத தேசம். திமுக முடிந்தால் திராவிட நாடு கோஷம் போடு பார்க்கலாம். இது பாரத தேசம். உன்னை போல் பல ஆயிரம் பேர் பார்த்தாகிவிட்டது. காஷ்மீர் பிரிவினைவாதிகளையே ஒடுக்கியாச்சு கருணாநிதி கும்பலுக்கு என்ன இருக்கு கொள்கை? திமுக பிரிவினை பேசு. பார்க்கலாம் உன் வீரத்தை" என ட்வீட் போட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் திருப்புவனம் தாலுகா, கீழடியை சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராஜா மாரிதாஸ் மீது திருப்புவனம் காவல் நிலையத்தில், ‘’ மாரிதாஸ், திமுக மீது தவறான பார்வையை புகுத்துவதாகவும், மு.க.ஸ்டாலினின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், அவரது சமூக வலைதள பதிவுகளை நீக்குவதோடு மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என புகார் மனு அளித்துள்ளார். இதனடிப்படையில் மாரிதாஸ் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.  
 

click me!