மாரிதாஸை கீழ்த்தரமாக விமர்சித்த பி.ஆர் பாண்டியன் ..!! விவசாயிகளுக்கு எதிராக பேசுவதாக குற்றச்சாட்டு..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 18, 2020, 3:08 PM IST
Highlights

 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரத்தை சேர்ந்த சலூன் கடை நடத்தி மறைந்த மலைச்சாமி என்பவரது மகன் என தெரிய வருகிறது.

ஜூலை 31ல் விவசாயிகள் மத்திய கூட்டுறவு வங்கிகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக. தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசரக் கூட்டம் காணொளி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித் பி.ஆர் பாண்டியன் இதனை அறிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:- 

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் செயற்று முடங்கி உள்ளது. வேளாண் கடன் கிடைக்காத விவசாயிகள் மனமுடைந்து  செய்வது அறியாது உள்ளனர். எனவே நிபந்தனையின்றி சாகுபடி பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் பழைய முறையை பின்பற்றி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கிட வேண்டும். வேளாண் கூட்டுறவு வங்கிகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டித்தும், தமிழக அரசு உடனடியாக பழைய நடைமுறையை பின்பற்றி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கிட உரிய அரசாணை பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி வரும் ஜூலை 31ல் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள் முன் விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். 

விவசாயிகள் நிலங்களை கற்ப்பழிக்கிறார்கள், இலவச மின்சாரத்தை பயன் படுத்தி நிலத்தடி நீரை பாழடிக்கிறார்கள் மாற்று தொழில்களை விவசாயிகள் என்ற போர்வையில் எதிர்க்கிறார்கள் என்றும் விவசாயிகளை கொச்சைப்படுத்தி அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் மாரிதாஸ் என்ற நபர் வலைதளங்களில் விமர்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரத்தை சேர்ந்த சலூன் கடை நடத்தி மறைந்த மலைச்சாமி என்பவரது மகன் என தெரிய வருகிறது. தமிழக அரசு இணையதள விமர்சனம் என்றப் பெயரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதோடு, விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்ப்படுத்தி வரும் மாரிதாசை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்க்கொள்வதோடு, இவரது இணையதள கணக்குகளை முடக்கிட தமிழக அரசு முன் வர வேண்டுமென வலியுறுத்துகிறோம். 

மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் குறுவை சாகுபடி மேற்க்கொண்ட விவசாயிகள் தொடர முடியுமா? என அச்சத்தில் உள்ளனர். சம்பா சாகுபடி துவங்க முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தமிழகத்திற்க்கான தண்ணீரை பெற்றுத் தர முதலமைச்சர் அவசரகால நடவடிக்கையை மேற்க்கொள்ள வேண்டும். குறுவை தொகுப்புத் திட்டம் வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்திட வேண்டும். குறுவை காப்பீடு செய்வதற்கு அனைத்து கிராமங்களுக்கும் நிபந்தனையின்றி அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்றார். மேற்க்கண்டவாறு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

click me!