திமுகவில் முன்னாள் அமைச்சர்கள் பலர் ஜெயிலுக்கு செல்வது உறுதி.. கொட்டும் மழையில் நெருப்பை கக்கிய எடப்பாடியார்.!

By vinoth kumarFirst Published Jan 3, 2021, 10:53 AM IST
Highlights

தமிழக மக்களை ஏமாற்றி எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். தமிழக விவசாயிகளை குழந்தைபோல் அதிமுக அரசு பாதுகாத்து வருகிறது. விவசாயிகளை ரவுடியோடு பேச வேண்டாம். விவசாயியும் ரவுடியும் ஒன்றா என கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக விவசாயிகளை குழந்தைபோல் அதிமுக அரசு பாதுகாத்து வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கொட்டும் மழையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அப்போது, அவர் பேசுகையில் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறார். டெண்டர் முடிந்து ஓராண்டு கழித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் வாரிசு அரசியலை கொண்டுவர முயல்கிறார்கள். வாரிசு அரசியலுக்கு தேர்தல் மூலம் மக்கள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 

திமுகவில் முன்னாள் அமைச்சர்கள் பலர் ஜெயிலுக்கு போவது உறுதி. இவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகையால்,  முன்னாள் அமைச்சர்கள் யாரும் வாய் பேசுவதில்லை. திமுக முன்னாள் அமைச்சர்களான பெரியசாமி மீது 9 வழக்கு, பொன்முடி மீது 3 வழக்கு, கே.என்.நேரு, துரைமுருகன்,  எம்.ஆர்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதும் 2 வழக்கும், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், பெரிகருப்பண், இவர்கள் ஒரு வழக்கு உள்ளது. கனிமொழி மீது பெரிய வழக்கு உள்ளது. அவர்களுக்கு தனி சிறையே ஒதுக்கி வைத்துள்ளனர். விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுகதான். 

தமிழக மக்களை ஏமாற்றி எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். தமிழக விவசாயிகளை குழந்தைபோல் அதிமுக அரசு பாதுகாத்து வருகிறது. விவசாயிகளை ரவுடியோடு பேச வேண்டாம். விவசாயியும் ரவுடியும் ஒன்றா என கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகளை ரவுடிகளோடு ஒப்பிடுவது கட்சி தலைவருக்கு அழகல்ல என கூறி ஸ்டாலினுக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயி என்றால் உழைப்பாளி, விவசாயி என்பவர் யாரையும் எதிர்பாராமல் சொந்தகாலில் நிற்பவர். விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க, தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார். 

click me!