மூக்கில் குழாயுடன் உட்கார்ந்து பட்ஜெட் தாக்கல் செய்த மனோகர் பாரிக்கர்…. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கடமையைச் செய்த முதலமைச்சர் !!

By Selvanayagam PFirst Published Jan 31, 2019, 8:03 AM IST
Highlights

கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் மூக்கில் பொருத்தப்பட்ட குழாயுடன் சட்டப் பேரவைக்கு வந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், உட்கார்ந்து கொண்டே பட்ஜெட தாக்கல் செய்தார். உறுப்பினர்கள் அனைவரும் அவரை நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

கணைய புற்றுநோயால், பாதிக்கப்பட்டுள்ள கோவா முதலமைச்சர்  மனோகர் பாரிக்கர், கடந்த ஓர் ஆண்டுக்கு  மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜனவரி 1ந்தேதி முதல் தலைமை செயலகம் வந்து பணியாற்ற தொடங்கினார்.

இந்த நிலையில், கோவா சட்டசபையில், அவர் நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் உட்கார்ந்து கொண்டு பட்ஜெட் உரையை வாசித்தார். 2019-20 ஆண்டுக்கான வருவாய் உபரி பட்ஜெட்டை முன்வைத்த பாரிகர், ஒரு சுருக்கமான அறிக்கையைப் படித்தார்,

புற்று நோய்க்கு அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதால் அவருக்கு  மூக்கில் குழாய் பொருத்தப்பட்டிருந்தது. அதோடு அவர் பட்ஜெட் உரையை மிகுந்த சிரமப்பட்டு வாசித்தார். அப்போது சபாநாயகர் பிரமோத் சாவந்த் அவரது உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு தற்போதைய சூழல்கள் விரிவான பட்ஜெட் உரையை வழங்குவதிலிருந்து தடுத்திருக்கின்றன, ஆனால் எனக்கு தன்னம்பிக்கை உள்ளது, நான் முழுமையாக இருக்கிறேன், என்னால், திறம்பட மொழி பெயர்க்க முடியும் என்று பாரிக்கர் கூறினார்.

பட்ஜெட் வாசித்தபோது புத்தகத்தின் பக்கங்களை கூட புரட்ட முடியாமல் பாரிக்கர் அவதிப்பட்டார். அவருக்கு மார்ஷல்கள் உதவி புரிந்தனர்.அப்போது பேசிய பாரிகர் தனது தாயார் மற்றும் கோவாவிற்கு நிறைய கடன்பட்டிருப்பதாகவும், எனது கடந்த இறுதி மூச்சு வரை நேர்மையுடனும்  அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்றும் கூறினார்.

click me!