உங்க ஆட்சியில் தான் வங்கிகள் நிலைமை மோசமானது ! மன்மோகன் மோகன் சிங்கை சீண்டிய நிர்மலா சீத்தாராமன் !!

By Selvanayagam PFirst Published Oct 19, 2019, 8:25 AM IST
Highlights

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை மதிக்கிறேன். அதேநேரம், எந்த காலகட்டத்தில், எங்கே தவறு நேர்ந்தது என்பதை, யோசித்து பார்க்க வேண்டியது அவசியம்' என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்துக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி தந்துள்ளார்.
 

ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்கா சென்றுள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய  நிர்மலா சீத்தாராமன், மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராகவும் இருந்த காலகட்டத்தில், பொதுத்துறை வங்கிகள் மோசமாக நிர்வகிக்கப்பட்டதால் தான், அவை, இன்றைக்கு மிகப்பெரிய சிக்கல்களை சந்தித்து வருகின்றன என குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலடியாக, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு, மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு, மோடி அரசு, பிரச்னைக்கு தீர்வு காண முயல வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், அமெரிக்காவில் பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்த நிர்மலா சீதாராமன் யாரையும் குறை கூற வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. 
மற்றவர்கள் மீது பழிபோடுவதை நிறுத்துங்கள் என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை மதிக்கிறேன். அதே நேரம், எந்த காலகட்டத்தில், எங்கே தவறு நேர்ந்தது என்பதையும், யோசித்துப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்

click me!