
பத்மாவதி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்த, மேற்கு வங்க மாநில முதல்வர், மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுப்பவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்குவதாக, ராஜபுத்ர சமுதாய தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே நடித்த, பத்மாவதி திரைப்படத்தை வெளியிடுவதற்கு ராஜபுத்ர சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜபுத்ர சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள், இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாக, அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் நாளை வெளியாவதாக இருந்த இந்த திரைப்படம் தொடர் சர்ச்சை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திரைப்படத்தை திரையிட உத்தரபிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்கள் தடை செய்துள்ளன.
இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை தீபிகாவின் தலையை கொண்டுவந்தால் 1 கோடி பரிசு, மூக்கை அறுத்தால் 10 கோடி பரிசு என ரஜ்புத் அமைப்பினர் கடந்த பல நாட்களாக மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இந்த படத்தை திரையிட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தங்களது மாநிலத்தில் திரையுட அனுமதி வழங்கியுள்ளார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜபுத்ர சமுதாயத்தினர், உத்தரபிரதேச மாநிலம், ஷாமலி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 'மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுத்து வருபவர்களுக்கு, 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என, அந்த சமுதாயத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் பகிரங்கமாக அறிவித்தார்.