நமக்கு தெரியாம இந்தியாவோட பெயரையே மாத்திடுவாங்க போல இந்த பாஜக காரங்க  !! கொளுத்திப் போட்ட மம்தா பானர்ஜி !!!

 
Published : Oct 18, 2017, 01:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
நமக்கு தெரியாம இந்தியாவோட பெயரையே மாத்திடுவாங்க போல இந்த பாஜக காரங்க  !! கொளுத்திப் போட்ட மம்தா பானர்ஜி !!!

சுருக்கம்

mamtha banerji speake about bjp

நமக்கு தெரியாம இந்தியாவோட பெயரையே மாத்திடுவாங்க போல இந்த பாஜக காரங்க  !! கொளுத்திப் போட்ட மம்தா பானர்ஜி !!!

நமது நாட்டின் பெயரைக் கூட பாஜகவினர் நமக்குத் தெரியாமல் மாற்றிவிடுவார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி  மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலக அதிசயங்களுல் ஒன்றான தாஜ்மஹால் குறித்து பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் தெரிவித்த கருத்து குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு அளித்த பதில் அளித்த,  மம்தா பானர்ஜி , இது பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் கொள்கை. தற்போது அது வெளிப்படையாகத் தெரிகிறது என கூறினார்.

ஒரு நாட்டின் நினைவுச் சின்னத்தை எப்படி மதத்தின் பெயரால் அந்த நாட்டின் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியும். மிகவும் தவறான பாதையில் பா.ஜ.க பயணிக்கிறது. இங்கு நடப்பது சர்வாதிகார ஆட்சி. பலதரப்பட்ட மக்கள் தங்கள் வேற்றுமைகளைக் கடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நாட்டில் தற்போது இந்தக் கருத்து தேவையற்றது. இதுபோன்று கருத்து தெரிவிப்பவர்களை நாம் விலக்கி வைக்கவேண்டும் என தெரிவித்தார். 

பா.ஜ.க.வினரை பற்றி குறைவாக பேசுவதே நல்லது. அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் அதற்கு பதிலாக பிரச்னையை தூண்டும் வகையில் நடந்துகொள்கின்றனர். வரலாற்றை மாற்றி எழுதுவதாக கூடிய விரைவில் நமக்குத் தெரியாமல் நமது நாட்டின் பெயரைக் கூட பா.ஜ.க.வினர் மாற்றிவிடுவார்கள் என மம்தா பானர்ஜி தெரிவித்தார். 

 

 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!