காலாவதியான பிரதமருடன் எல்லாம் பேச முடியாது !! மோடியை அவமானப்படுத்திய மம்தா !!

By Selvanayagam PFirst Published May 6, 2019, 11:38 PM IST
Highlights

மேற்கு வங்க மாநிலத்தில் வீசிய ஃபானி புயல் குறித்து மோடி பேச முயன்றதாகவும் ஆனால் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச மறுத்துவிட்டதாகவும் மோடி குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள அம்தா பானர்ஜி காலாவதியான பிரதமருடன் எல்லாம் பேச முடியாது என்றும் புதிய பிரதமரும் பேசிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தம்லுக் பகுதியில்  தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி  ,சகோதரி மம்தா மிகவும் விரக்தியடைந்துள்ளார். கடவுள் பற்றி பேச அல்லது கேட்க கூட விரும்பவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கமிடும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார் சகோதரி மம்தா. ஃபானி புயலை வைத்து கூட மம்தா பானர்ஜி அரசியல் செய்ய முயற்சி செய்கிறார். நான் சகோதரி மம்தாவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர் அகங்காரத்துடன்  என்னிடம் பேச மறுப்பு தெரிவித்தார் என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி இருந்தார். 

மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள மம்தா பானர்ஜி. ஃபானி புயல் குறித்து பிரதமர் எனக்கு பேசியபோது நான் காரக்பூரில் ஒரு  பிரசாரத்தில் இருந்தேன். அதனால் தான் நான் போனை எடுக்க முடியவில்லை என விளக்கினார். 

அதே நேரத்தில் தேர்தல் முடிந்தவுடன் காலாவதியாகும் பிரதமருடன் நான் பேச விரும்பவில்லை எனவும் பிரதமருடன் பேச்க் கொள்கிறேன் எனவும் மம்தா தெரிவித்தார்.

click me!