கொஞ்சம் கூட நிதானம் இல்லாத மம்தா.. மரியாதைன்னா என்னணு கத்துக்கங்க மேடம்.. கண்ணியம் குறையாத பட்நாயக்.

By Ezhilarasan BabuFirst Published May 29, 2021, 11:52 AM IST
Highlights

அரசியலில் ஆயிரம் முரண்கள் இருந்தாலும் இந்தியாவின் ஆகச்சிறந்த கூட்டாட்சி தத்துவத்தை பங்கமின்றி பாதுகாப்பது எப்படி என்பதை பட்நாயக் போன்ற சக மாநில முதல்வர்களிடம் மம்தா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். 
 

புயல் தொடர்பாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்து மம்தா பானர்ஜி அவமரியாதை செய்துள்ள அதே வேளையில் யாஷ் புயலால் பாதித்த தனது மாநிலத்திற்கு ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருடனான ஆய்வுக் கூட்டத்தில் பரஸ்பரம் பங்கேற்று, மாநில மக்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுள்ளார். அரசியலில் ஆயிரம் முரண்கள் இருந்தாலும் இந்தியாவின் ஆகச்சிறந்த கூட்டாட்சி தத்துவத்தை பங்கமின்றி பாதுகாப்பது எப்படி என்பதை பட்நாயக் போன்ற சக மாநில முதல்வர்களிடம் மம்தா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். 

அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் பிரதமர் என்ற முறையில் அவருக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டியது  இந்திய அரசியலமைப்பு , கூட்டாட்சி தத்துவத்தின் விதி. இது போன்ற அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் எந்த நேரத்திலும் மக்களின் நலனுக்கு உதவாது என்று பலரும் மம்தாவை விமர்சித்து வருகின்றனர்.  

வங்கக் கடலில் உருவான புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை மிக கடுமையாக தாக்கியுள்ளது, இதனால் ஒடிசாவில் பத்துக்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.  கிட்டத்தட்ட மூன்று லட்சம் வீடுகளை புயல் நிர்மூலமாக்கியுள்ளது. அதேபோல் மேற்கு வங்கத்தின் மிட்னாபூர், தெற்கு 24 பர்கானா ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம் மற்றும் ஒரிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நேரடியாக ஆய்வு செய்து முதற்கட்ட நிவாரணம் அறிவித்துள்ளார். முன்னதாக இதையொட்டி  மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பிரதமர் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆய்வுக்கூட்டம் தொடங்கி பிரதமர் ஆளுநர் உள்ளிட்டோர் அரைமணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும்,  மம்தா பானர்ஜி அரசு அதிகாரிகள் அதில் கலந்து கொள்ளவில்லை, பின்னர் காலதாமதமாக கூட்டத்திற்கு வந்த மம்தா பானர்ஜி அவசர அவசரமாக கூட்டத்திலிருந்து கிளம்பினார். அவரின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பிரதமரை அவமதிக்க வேண்டும் என்று திட்டமிட்டே அவர் இப்படி நடந்து கொண்டுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் பிரதமர் மோடி  இது அனைத்தையும்  பொருட்படுத்தாமல் மக்கள் நலனே பிரதானம் என பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு மாநிலத்துக்கு தேவையான முதற்கட்ட நிதி ஒதுக்கி உள்ளார். மம்தா திட்டமிட்டு பிரதமரை இழிவு படுத்தியுள்ள, இதே நேரத்தில் யாஷ் புயலால் பாதிக்கப்பட்ட மற்றொரு மாநிலமான ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், அறிவிக்கப்பட்டபடி, பிரதமர் தலைமையில் புவனேஸ்வரில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு முறையாக தங்களது மாநிலத்திற்கு தேவையான நிதியை பரஸ்பரம் கேட்டுப் பெற்றுள்ளார். நவீன் பட்நாயக்கிற்கும் மத்திய அரசுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து மோதல் இருந்து வருவதை அறிவோம். ஆனால் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரதமர் என்ற முறையில் அவர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு கண்ணியத்துடன்  நடந்துகொண்டுள்ளார் பட்நாயக். இதுதான்அரசியல் முதிர்ச்சி.   

ஆனால் பிரதமர் என்றும் பாராமல் மம்தா நடந்து கொண்டுள்ள விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ஆனாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமர் மோடி வெள்ள சேதாரத்தை ஆய்வுசெய்து நிவாரண பணிகளுக்கு முதற்கட்டதாக ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழு அனுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒடிசாவுக்கு மட்டும் 500 கோடி, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் இரண்டிற்கும் சேர்த்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து மாநில நலனே குறிக்கோள் என இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு பங்கம் ஏற்படாதவாறு மம்தா நடந்து கொள்ள வேண்டும்,  மத்திய அரசுடன் சுமுகமான உறவே போணுவதே மாநிலத்திற்கு நன்மை பயக்கும் என்பதை ம ம்தா புரிந்து கொள்ள வேண்டும், பிரதமர், முதல்வர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை சக மாநில முதல்வர்களிடம் மம்தா கற்றுக்கொள்ள வேண்டுமென பலரும் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். 

 

click me!