ஐபேக் பி.கே.,வால் தன் தலையிலேயே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்ட மம்தா... முதலுக்கே மோசம்..!

By Thiraviaraj RMFirst Published Dec 18, 2020, 3:34 PM IST
Highlights

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் வியூகராக நியமிக்கப்பட்டுள்ள ஐபேக் பிரசாந்த் கிஷோரால் அக்கட்சியின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் வியூகராக நியமிக்கப்பட்டுள்ள ஐபேக் பிரசாந்த் கிஷோரால் அக்கட்சியின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சில்பத்ரா தத்தா இன்று கட்சியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் கட்சியிலிருந்து வெளியேறிய மூன்றாவது எம்.எல்.ஏ.,வாக சில்பத்ரா தத்தா. முன்னதாக, மம்தா பானர்ஜியின் நம்பகமான உதவியாளர் சுவேந்து அதிகாரி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த ஒரு நாள் கழித்து பராக்பூரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தத்தா ராஜினாமா செய்தார்.

அதற்கு முன்னாள், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் பூர்பா மெடினிபூர் மாவட்டத்தில் நந்திகிராம் தொகுதியை சேர்ந்த சுவேந்து அதிகாரி. கடந்த மாதம் மாநில அமைச்சரவையில் இருந்தும் விலகினார். அடுத்து பந்தபேஸ்வர் எம்.எல்.ஏ மற்றும் அசன்சோல் குடிமை அமைப்பின் தலைவர் ஜிதேந்திர திவாரி நேற்று மாலை கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து தற்போது மூன்றாவதாக ஒரு எம்.எல்.ஏ., வாக திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வெளியேறி உள்ளார் சில்பத்ரா தத்தா. முன்னாள் அமைச்சர் ஷியாமபிரசாத் முகர்ஜியும் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் சேரப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த தகவல்களின்படி, தத்தா சில காலமாக கட்சித் தலைமையிடம் இருந்து நெருக்கம் காட்டாமல் இருந்து வந்துள்ளார். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த தத்தா, ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து  வரும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைய தயாராக உள்ள திரிணாமுல் கட்சித் தலைவர்களின் நீண்ட பட்டியலில் அவர் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது.

 

“தற்போதைய சூழ்நிலையில் நான் கட்சியில் இருக்க தகுதியற்றவன் என்று நான் நினைக்கிறேன். ஆனால், நான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். நான் ஏன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்? மக்கள் வாக்குகளால் நான் வென்றேன். நான் ராஜினாமா முடிவெடுத்தால், அவர்கள் எங்கே போவார்கள்?”என அவர் கூறியுள்ளார்.  

கடந்த சில மாதங்களாக, தேர்தல் தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள், கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், தற்போது வரை மூன்று பேர் மட்டுமே வெளியேறியுள்ள நிலையில், பிரஷாந்த் கிஷோரின் ஆதிக்கம் தொடர்ந்தால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அணி அணியாக திரிணாமுல் கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் வெளியேறும் சம்பவங்கள் அதிகரிக்கும் என அக்கட்சியினரே பேசிக் கொள்கிறார்கள். 

தேர்தல் வெற்றிக்காக பிரஷாந்த் கிஷோரை மம்தா பானர்ஜி வரவழைத்துள்ள நிலையில், அவரின் நடவடிக்கைகளால் தற்போது கட்சியே காணாமல் போகும் சூழல் நிலவும் நிலையிலும், மம்தா பானர்ஜி கண்டுகொள்ளாததால், தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

click me!