மோடி உடைத்த மம்தா பானர்ஜி ரகசியம்..!

By Vishnu PriyaFirst Published Apr 25, 2019, 3:53 PM IST
Highlights

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பி.ஜே.பி. தலைவர்கள் பிரசாரத்திற்கு வசதியாக செல்ல வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு நீண்ட நாட்களாக, ஆசுவாசமாக தேர்தலை நடத்துகிறது  மோடி அரசு

* இப்போதைய மத்திய அரசால் மக்கள் எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடும் நெருக்கடிகள் தரப்படுகின்றன ஆட்சியாளர்களால். எனவே ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர்: பிரியங்கா காந்தி. (யக்கோவ்! நீங்க ‘மக்கள், மக்கள்’ன்னு சொல்றதை நாங்க உங்க வூட்டுக்காரர்  வதோர, வதோரான்னு புரிஞ்சுக்கணும் அப்படித்தானே. அந்நியசெலாவணி விவகாரத்துல அமலாக்கத்துறைட்ட சிக்கி அவர் நூடுல்ஸ் ஆகுறதை மனசுல வெச்சுட்டுதானே இப்படி புலம்பறீங்க?)

* தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு அருகே வெடிகுண்டு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிபர், அமைச்சரவை, மக்கள் அதிர்ச்சி: செய்தி (பயபுள்ளைங்க, செஞ்சோலையில பிஞ்சுக் குழந்தைங்க முடங்கிக் கிடந்த குழிகளை தேடி கண்டுபிடிச்சு குண்டு வீசி கொன்னானுங்க. ஆனா இப்ப தங்களோட தலைநகர்ல பயங்கரவாத ஃபேக்டரி இயங்குனதையே கோட்டை விட்டிருக்காங்க. தெய்வம் மட்டுமல்ல புத்தனும் நின்னு கொல்வார் போல!)

* ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்  தொடர்ந்து இயங்குமா, தடை வருமா? என்பது பற்றி நீதிமன்ற விசாரணை நடக்க இருக்கிறது: செய்தி. (ஏங்க இன்னுமாங்க அந்த ஆறுமுகசாமி அய்யா விசாரணை நடத்திட்டு இருக்காரு? அட போங்க பாஸு. அம்மாவோட ஆன்மாவே  ஆணையத்துக்கு வந்து ‘மிஸ்டர் ஆறுமுகசாமி, ஸ்டாப் திஸ்’ன்னு சொல்ற வரைக்கும் நல்லாவே ஓட்டுவாய்ங்க போலிருக்குதே)

* நடந்து முடிந்த தேர்தலின் கள நிலவரம் குறித்து மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு வருகிறேன். கூடிய விரைவில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும். குறிப்பாக தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு வீட்டுக்கு அனுப்பப்படும், தி.மு.க.வின் ஆட்சி அமையும்: ஜவாஹிருல்லாஹ். (ஒண்ணுமில்லைங்க, ஸ்டாலினை சந்திச்சுட்டு வந்திருக்கார்ல இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இதே டைப்லதான் பேசுவாப்ல. அடிச்ச காத்து அப்படித்தான் அவரைப் பேச வைக்கும். அப்புறம் தானா நார்மலாகிடுவார்.)

* ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பி.ஜே.பி. தலைவர்கள் பிரசாரத்திற்கு வசதியாக செல்ல வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு நீண்ட நாட்களாக, ஆசுவாசமாக தேர்தலை நடத்துகிறது  மோடி அரசு: மம்தா பானர்ஜி (க்கும், மக்கள்ட்ட பேசுறப்ப மட்டும் மோடிய கன்னாபின்னான்னு திட்டுங்க. அப்புறம் அவருக்கு வருஷா வருஷம் குர்தாவும், ஸ்வீட்ஸும் அனுப்புறதை என்னைக்காவது ஓப்பனா சொல்லி இருக்கீங்களா?இப்ப அவரு ரகசியத்தை போட்டு உடைச்சு, கடையை காலி பண்ணிட்டாரு பாருங்க.)
 

click me!