பெட்ரோல், டீசல் விலை இனி உயராது.. உறுதிமொழி கொடுக்க முடியுமா..? மத்திய அரசை சீண்டும் மநீம..

Published : May 23, 2022, 01:43 PM IST
பெட்ரோல், டீசல் விலை இனி உயராது.. உறுதிமொழி கொடுக்க முடியுமா..? மத்திய அரசை சீண்டும் மநீம..

சுருக்கம்

பெட்ரோல், டீசல் விலை இனிமேல் உயராது என்ற உறுதிமொழி தான் உண்மையான தீர்வை தரும் என்று மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.  

பெட்ரோல், டீசல் விலை இனிமேல் உயராது என்ற உறுதிமொழி தான் உண்மையான தீர்வை தரும் என்று மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 அதிகரித்துவிட்டு, இப்போது அதற்கும் குறைவாகவே விலையைக் குறைத்துள்ளனர். இது நிச்சயம் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டிய நிலையில் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க: நீங்க உயர்த்துவீங்க.. நாங்க குறைக்கனுமா.. அண்ணாமலை இதெல்லாம் படித்தாவது தெரிஞ்கனும்.. அமைச்சர் பதிலடி..

பெட்ரோல், டீசல் விலை இனிமேல் உயராது என்ற உறுதிமொழிதான் உண்மையான தீர்வைத் தரும். அதேபோல, பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு மட்டும் சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 2015-ல் ரூ.435-க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் தற்போது ரூ.1,000-ஐத் தாண்டிவிட்டது. அனைத்து குடும்பங்களுக்கும் சிலிண்டர் விலையைக் குறைத்தால் தான் நிம்மதியாய் சமைக்க முடியும். எரிபொருட்கள் விலையைக் குறைக்காவிடில், பணவீக்கம், விலைவாசி உயர்வை மறைக்க  மத்திய அரசு நாடகம் அரங்கேற்றுவதாகவே எண்ணத் தோன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உங்களுக்கு 72 மணிநேரம் தான் டைம்.. அதுக்குள்ள நிறைவேற்றுங்க.. திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு