நான் பாலியல் குற்றம் செய்ததை ஜோதி மணி பார்த்தீங்களா.? உங்களை தங்கச்சி என்றுதான் சொல்கிறேன்.. சீமான் ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published May 23, 2022, 1:31 PM IST
Highlights

நான் பாலியல் குற்றம் செய்ததை ஜோதிமணி பார்த்தாரா என்றும், நான் அவரை தங்கை என்று சொல்வதை தவிர வேறு கூறவில்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நான் பாலியல் குற்றம் செய்ததை ஜோதிமணி பார்த்தாரா என்றும், நான் அவரை தங்கை என்று சொல்வதை தவிர வேறு கூறவில்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பாலியல் குற்றவாளி நானல்ல அவரது தலைவர் ராஜீவ் காந்தி தான் பாலியல் குற்றவாளி என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்துவருகிறது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் அக்கட்சித் தலைவர்களை தாக்கி பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என ஜோதிமணி விமர்சித்திருந்தார். அது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குதான்  சீமான் இவ்வாறு காட்டமாக பதில் அளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக முத்து நகர் படுகொலை என்ற ஆவணப்படத்தை படக்குழுவினருடன் பார்த்தார். பின்னர் அது குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தூத்துக்குடி துப்பாக்கி சூடு மூலமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. ஆலையில் இருந்து வரும் பாதிப்புகளை தாங்க முடியாமல்தான் மக்கள் போராட்டத்துக்கு வந்தனர். ஆனால் தனி ஒரு முதலாளிக்கு ஆதரவாக அரசு செயல்பட்டது. எவராவது கைக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு  கலவரத்திற்கு வருவார்களா? அப்படி குழந்தைகளுடன் அறவழியில் போராட வந்தவர்கள்தான் போலீஸ் சுட்டுத் தள்ளியது. பேருந்தை கொளுத்தியது,  பின்னர் கலவரத்தை செய்தது காவல்துறை தான்.

எதைப்பற்றியும் யோசிக்காமல் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது காவல் துறை, வாகனத்தின் மீது ஏறி வசதியாக மக்களை சுட்டனர், இதுதான் தற்காப்பா? காவல்துறை செய்தது சுத்த படுகொலை,  இதே நாம் தமிழர் ஆட்சியாக இருந்தால் யாராக இருந்தாலும் விட்டிருக்க மாட்டோம். மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று கேட்டு நடவடிக்கை எடுத்திருப்போம் என்றார். அப்போது ஜோதிமணி தங்களை பாலியல் குற்றவாளி என  விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து இந்திய ராணுவம் தமிழ்ப் பெண்களை வன்புணர்வு செய்து கொன்றது. அதற்கு காரணமாக இருந்தவர் பாலியல் குற்றவாளிகள் ராஜீவ் காந்திதான். ஏன் அதைப் பற்றி எல்லாம் ஜோதிமணி பேசவில்லை.

நான் பாலியல் குற்றம் செய்தேன் என்பதை ஜோதிமணி பார்த்தாரா? உங்களை தங்கச்சி என்பதைத் தவிர வேறு கூறவில்லை, பாலியல் குற்றவாளி உங்க ஆளு ராஜீவ்காந்தி தான் என காட்டமாக விமர்சித்தார். ராஜீவ் கொலை வழக்கில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய வாய்ப்பு இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்ய  முடியாது என்று கூற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அதை உச்சநீதிமன்றம் தான் கூற வேண்டும். பேரறிவாளனை விடுதலை செய்ய உபயோகம் செய்த அதே சட்டத்தை இதிலும் பயன்படுத்தலாம். பேரறிவாளன் நிரபராதி என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் குஜராத் கலவரத்தில் மோடியும், அமித்ஷாவும் நிரபராதி என்று ஏற்றுக்கொள்ள முடியுமா என கேள்வி எழுப்பினார். 
 

click me!