தப்பு செஞ்சவங்க எந்த ஜாதியாக இருந்தாலும் தண்டிக்கணும்... இரண்டு பெண்களின் தகப்பனாக பொங்கி எழுந்த கமல்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 26, 2021, 3:08 PM IST
Highlights

பிஎஸ்பிபி பள்ளி பாலியல் புகார் குறித்து இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பிஎஸ்பிபி பள்ளி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அரை நிர்வணமாக ஆன்லைன் கிளாஸ் எடுப்பது, மாணவிகளுக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்புவது, நள்ளிரவில் வீடியோ கால் செய்வது என ராஜகோபாலனின் அத்துமீறல்கள் அதிகரித்த போதும் அதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. 

இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி பாலியல் புகார் குறித்து இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாதரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்வை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது . தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் திகழ்ந்த நிகழும் பாலியல் துன்பறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விராரிக்க வேண்டும்.

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ‘மகாநதி’ இன்றும் அந்த பதற்றம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஆன்வைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நமது பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரி பார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்சனைகளுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி துணையாக இருக்கவேண்டும். 


இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஓர் அறிவுச்சமூகமாக நாம் அனைவரும் போராடி நீதியை நிலை நாட்ட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 
 

click me!