18 மாவட்டங்களுக்கு 1,400 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைப்பு... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி...!

By Kanimozhi Pannerselvam  |  First Published May 26, 2021, 2:38 PM IST

சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்த 1400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெகுலேட்டர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். 


சிப்காட் நிறுவனம் மூலம் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்த 1400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெகுலேட்டர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அனுப்பிவைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து 10 லாரிகளில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

 

 சிங்கப்பூரிலிருந்து 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டன. அதன்படி கரூர், தருமபுரி,  நீலகிரி, நாமக்கல், நாகை, திருவாரூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 75 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், சிவகங்கை, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டத்திற்கு தலா 100 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 50, என மொத்தம் 1400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்காக வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சிப்காட் நிறுவனம், சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் துபாயிலிருந்து 1,915 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2,380 ஆக்சிஜன்  செறிவூட்டிகள்,  3,250 மருத்துவ ஆக்ஸிஜன் அளவீடு மீட்டர்கள் 5,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள்,   800 ஆக்சிஜன் நிரப்பட்ட சிலிண்டர்கள்மொத்தம் 40.71 கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதி செய்ய  ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 515 ஆக்சிஜன் சிலிண்டர்கள்,  1,780 மருத்துவ ஆக்சிஜன் ஒழுங்குபடுத்தும் கருவிகளும்,  250 மருத்துவ ஆக்சிஜன் ஓட்ட அளவு கருவிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

click me!