இதுலயமா எங்கள காப்பி அடிப்பீங்க..? திமுகவை சீண்டும் மக்கள் நீதி மய்யம்..!

By Selva KathirFirst Published Dec 18, 2019, 10:37 AM IST
Highlights

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு தொகுதிக்கு ஒரு கிராமம் என தேர்வு செய்து ஸ்டாலின் நேரடியாக சென்று மக்களை சந்தித்தார். திமுக சார்பில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டங்களில் பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த கிராம சபை கூட்டங்களை திமுக மிகத் தீவிரமாக முன்னெடுத்தது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உச்சநீதிமன்றம் சென்றுள்ள நிலையில் தாங்கள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் முதல் ஆளாக வழக்கு தொடர்ந்துவிட்டதாக கூறி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சிரித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு தொகுதிக்கு ஒரு கிராமம் என தேர்வு செய்து ஸ்டாலின் நேரடியாக சென்று மக்களை சந்தித்தார். திமுக சார்பில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டங்களில் பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த கிராம சபை கூட்டங்களை திமுக மிகத் தீவிரமாக முன்னெடுத்தது.

அப்போது திடீரென தான் ஒரு வருடத்திற்கு முன்னரே கிராம சபை கூட்டங்களை நடத்தியதாகவும் அதனை பார்த்து தற்போது வேறு சிலரும் நடத்துவது மகிழ்ச்சி என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். அப்போது முதல் மக்கள் நீதி மய்யத்தை பார்த்து திமுக காப்பி அடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. கமல் நடத்திய கிராம சபை கூட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்டு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் திமுகவை கிண்டல் அடித்தனர்.

இதே போல் வேறு சில விஷயங்களிலும் கமலை பார்த்து ஸ்டாலின் காப்பி அடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு திமுகவில் ஆர்எஸ் பாரதி முதல் உதயநிதி வரை பதில் அளித்து விளக்கம் அளித்து ஓய்ந்து போயினர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

தமிழகத்தில் இருந்து முதல் ஆளாக கமல் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இன்று திமுகவும் குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. கமல் கட்சி உச்சநீதிமன்றம் சென்று இரண்டு நாட்களுக்கு பிறகு திமுக உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. இதனை வைத்து தான் தற்போது கமல் கட்சியினர் திமுகவை கலாய்த்து வருகின்றனர். அது தான் நாங்கள் முதலிலேயே சென்றுவிட்டோமே, இப்போது ஏன் திமுக அவசரம் காட்டுகிறது என்று அவர்கள் கேட்கும் கேள்வியிலும் நியாயம் இருப்பது போல் தெரிகிறது.

click me!