"ஜெயலலிதாவை பார்த்ததாக செங்கோட்டையன் சொல்வது முழு பொய்" - மைத்ரேயன் ஆவேசம்

 
Published : Feb 28, 2017, 02:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
"ஜெயலலிதாவை பார்த்ததாக செங்கோட்டையன் சொல்வது முழு பொய்" - மைத்ரேயன் ஆவேசம்

சுருக்கம்

There is no doubt that the death of former Chief Minister Jayalalithaa investigating the suspicions of the people

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் அது குறித்து விசாரணை நடத்தி தமிழக மக்களுக்கு சந்தேகத்தை தீர்க்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் மனு அளித்தனர்.

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் டிசம்பர் 5 ஆம் தேதி அவர் மரணமடைந்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது முதலமைச்சர் பொறுப்பு வகித்த ஓபிஎஸ், ஆளுநர், மத்திய அமைச்சர்கள் உட்பட யாரையுமே அவரை பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை.

இதனால் தமிழக மக்கள் அனைவருமே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் 12 பேர் இன்று பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன் எம்.பி. செப்டம்பர் 22ம் தேதிக்கு முன்பும், பின்பும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதாவை தான் பார்த்ததாக செங்கோட்டையன் கூறுவது பொய் முழு பொய் என தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு விசாரிக்க தகுதியில்லை என்றும் மைத்ரேயன் கூறினார் தங்களது கோரிக்கைகளை குடியரசுத் தலைவர் குறிப்பெடுத்துக் கொண்டார் என்றும் தாங்கள் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தீபா யார் என்றே எனக்குத் தெரியாது என்றார், பின்னர்  தீபக் யார் என்றே தெரியாது என்றார், இன்னும் சில நாட்கள் கழித்து  சசிகலா என்றால் யார் என்றே தெரியாது என்று கூட சொல்வார் என மைத்ரேயன் தம்பிதுரையை கலாய்த்தார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு