மின்விநியோகம் நிறுத்தப்பட்டால் அதற்கு இது மட்டுமே காரணம்... அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

Published : May 09, 2022, 09:16 PM IST
மின்விநியோகம் நிறுத்தப்பட்டால் அதற்கு இது மட்டுமே காரணம்... அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

சுருக்கம்

தமிழகத்தில் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டால் அதற்கு பராமரிப்பு பணி, பழுது மட்டுமே காரணமாக இருக்கும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டால் அதற்கு பராமரிப்பு பணி, பழுது மட்டுமே காரணமாக இருக்கும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு 14000 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே போல், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிலும் 14000 மெகாவாட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 17 நாட்கள் 16,000 மெகாவாடிற்கு மேல் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 8.32 யூனிட்டாக உயர்ந்துள்ளது. பழுது ஏற்பட்ட இடங்களை உடனே சரிசெய்ய வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் தெரிவித்திருக்கிறோம். ஒரு வாரமாக 57 ஆயிரம் டன் நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது.  

அதை அதிகப்படுத்த மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளோம். குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம் பற்றி எதுவுமே தெரியாமல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். மின்சாரத்தை உற்பத்தி செய்து வெளிமாநிலங்களுக்கு யூனிட் 12 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடுமையான மழை பெய்ததால் மின்தடை ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களைவிட 37 சதவீதம் மின் உற்பத்தி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

ஏப்ரல், மே மாதத்திற்கு முன் கூட்டியே 3,000 மெகாவாட் கொள்முதல் செய்ய கோரப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி  222 மெகாவாட் தான் இருந்தது. தற்போது ஒரு ஆண்டில் 137 மெகாவாட் அதிகரித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனல் மின் உற்பத்தி நிலையம் மூலம் 6200 மெகாவாட் சொந்த உற்பத்தி செய்யப்படும். ஏற்கனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்சாரம் இணைப்பு இலவசமாக கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு திட்டத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்சாரம் இணைப்பு இலவசமாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3.24 லட்சம் கோடி இணைப்பு உள்ளது. மின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்றால் கட்டமைப்பையும் வலுப்படுத்த வேண்டும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vijay: ஜெயலலிதா வீட்டில் குடியேறும் விஜய்.?! மீண்டும் பரபரப்பாகும் போயஸ்கார்டன்.!
TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?