முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு ஜெயலலிதா உதவியாளர் வைத்த முக்கிய கோரிக்கை..!

Published : May 04, 2021, 11:50 AM IST
முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு ஜெயலலிதா உதவியாளர் வைத்த முக்கிய கோரிக்கை..!

சுருக்கம்

இக்கட்டான சூழ்நிலையில் முதல்வர் பதவி உங்களை வந்தடைந்திருக்கிறது. விழிப்போடு செயல்பட்டு மக்களைக் காப்பாற்ற விரைவாக செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் கூறியுள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையில் முதல்வர் பதவி உங்களை வந்தடைந்திருக்கிறது. விழிப்போடு செயல்பட்டு மக்களைக் காப்பாற்ற விரைவாக செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் முதல்வர் பதவி உங்களை வந்தடைந்திருக்கிறது. விழிப்போடு செயல்பட்டு மக்களைக் காப்பாற்ற விரைவாக செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உங்களின் கவனத்திற்கு ஒரு சிறிய கருத்தை கொண்டுவர விரும்புகிறேன். 

கொரோனா பரிசோதனை செய்து நோயாளியை அடையாளப்படுத்திய பிறகு, அவர்களுக்கு உரிய மருந்தை அவர்கள் இல்லங்களில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளையே சென்று மருந்தை வாங்கிக்கொள்ளச் சொல்வதாக அறிகிறேன். நோயாளிகள்  வெளியில் சென்றால் நோய் மிக எளிதாக பரவும். அதேபோல், மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்களும் அவர்களாக சென்று மருத்துவமனையில் சேர்வதால் நோய் தொற்று எளிதில் பரவுகிறது. 

அவர்களையும் வீட்டில் வந்து அழைத்து செல்வதற்கு வாகன ஏற்பாடு செய்தால் நோய் தொற்றை குறைக்கலாம். கொரோனா நோயாளிகளுக்கென தனி அக்கறை செலுத்த நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டுகிறேன். சிறந்த முறையில் செயல்பட்டு, மக்கள் நலன் காக்க போராட இருக்கும் தங்களுக்கு என் அப்பன் முருகப்பெருமான் துணை இருக்க வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Prashant Kishor : பாஜக கோட்டையில் பிரசாந்த் கிஷோர் வென்றது எப்படி? விஜய்யை போல் பிரசாந்த் கிஷோர் கையிலெடுத்த மாற்று அரசியல் உத்தி!
Annamalai Goes Viral: "வீடியோ எடுக்காதீங்க... வேலை செய்யுங்கள்!" – வைகை கரையில் அண்ணாமலை வைரல்