காலியாகும் சிவ சேனா கூடாரம்; ஏக்நாத் ஷிண்டேவின் அடுத்த குறி எம்பிக்கள்

By Dhanalakshmi GFirst Published Jun 23, 2022, 6:26 PM IST
Highlights

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனாவின் ஆட்சி முடிவுக்கு வரும் சூழல் உருவாகி வருகிறது.  அக்கட்சியின் 
மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏக்களில் 40க்கும் அதிகமானவர்கள் தற்போது அந்தக் கட்சியின் அமைச்சரும்,
மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே கட்டுப்பாட்டில் உள்ளனர். இத்துடன் எம்.பி.,க்களையும் தனது 
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஏக்நாத் ஈடுபட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனாவின் ஆட்சி முடிவுக்கு வரும் சூழல் உருவாகி வருகிறது.  அக்கட்சியின் 
மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏக்களில் 40க்கும் அதிகமானவர்கள் தற்போது அந்தக் கட்சியின் அமைச்சரும்,
மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே கட்டுப்பாட்டில் உள்ளனர். இத்துடன் எம்.பி.,க்களையும் தனது 
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஏக்நாத் ஈடுபட்டுள்ளார்.

புதிய அரசு அமைந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க இருப்பதாக  
செய்தி வெளியாகியுள்ளது. சிவ சேனாவின் முன்னாள் கார்பரேட் நிர்வாகிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் 
கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

மழைக் காலம் முடிந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த 
தேர்தலில் முன்னாள்களை களம் இறக்கி சிவ சேனாவுக்கு பலத்த அடி கொடுப்பதற்கு ஏக்நாத் 
காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் கடந்த மார்ச் மாதமே முடிந்து இருக்க வேண்டியது. ஆனால், முதல்வர் 
உத்தவ் தாக்கரேவுக்கு உடல் நலம் இல்லாமல் போனது, கொரோனா என்று கால தாமதம் ஏற்பட்டது. 
இது தற்போது ஏக்நாத் ஷிண்டேவுக்கு சாதகமாகவும், உத்தவ் தாக்கரேவுக்கு பலத்த பின்னடைவையும் 
ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டேவின் மகன் கல்யாண் தொகுதி எம்.பி.,ஆக இருந்து வருகிறார்.  இவருடன் சேர்த்து எம்பிக்களை 
தனது பக்கம் ஈர்ப்பதற்கான பணிகளில் ஷிண்டே இறங்கியுள்ளார். இத்துடன், தனக்கு பாஜக 
பக்கம் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று உத்தவ் தாக்கரேவிடம் 
அமலாக்கத்துறை பிடியில் சிக்கி இருக்கும் எம்பி பாவனா காவ்லி கூறியுள்ளார். இதை சிவ சேனா கடுமையாக 
கண்டித்துள்ளது. அமலாக்கத்துறையை வைத்து மிரட்ட முடியாது என்று எச்சரித்துள்ளது. 

சிவ சேனாவில் இருந்து பாஜகவுக்கு 14 முதல் 15 எம்பிக்கள் தாவலாம் என்று பாஜக தலைவர்கள் ஆரூடம் 
கூறி வருகின்றனர். மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏக்களில் 42 எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதால், சிவ சேனாவில் 
13 எம்.எல்.ஏ.,க்களே மிஞ்சியுள்ளனர். இது கட்சிக்கு பெரிய சறுக்கலாக அமைந்துள்ளது. காங்கிரஸ், 
தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவ சேனா கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. 
இந்த நிலையில்தான் பெரிய சரிவை சந்தித்துள்ளது. கொரோனா காலத்தில் உத்தவ் தாக்கரே அரசு நன்றாக 
செயல்பட்டது என்ற பெயர், உள்ளாட்சி தேர்தலில் வெற்றியைக் கொடுக்கும் என்று கட்சி விசுவாசிகள் 
நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


இந்த சூழலில், கட்சியின் ஊதுகுழலான சாம்னாவில், ''அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை கடுமையாக 
எச்சரித்தும், நடக்கும் அனைத்து ஜனநாயக விரோத செயல்களுக்கும் காரணம் பாஜக. தான் என்று 
சுட்டிக் காட்டியுள்ளது. பின்னணியில் தாங்கள் இல்லை என்று கூறும் பாஜகவின் அசாம் முதல்வர்
கவுகாத்தியில் எப்படி அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை வரவேற்றார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா மக்களிடம் உத்தவ் தாக்கரேவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதை யாராலும் 
ஒன்றும் செய்ய முடியாது. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட்டால், 
தோல்வியை சந்திப்பார்கள் என்று சிவ சேனா கருத்து தெரிவித்துள்ளது.

click me!