
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எணி சார்பில் போட்டியிட்ட மதுசூதனனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் மறைந்த ஜெயலலிதாவின் உருவ பொம்மையை வைத்து வாக்கு சேகரித்தது தொடர்பான வழக்கில் அஇவர் இன்று கைத செய்யப்படுவார் என்று தெரிகிறது.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் அத்தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக, மறைந்த ஜெயலலிதாவின் சவப் பெட்டியின் மாதிரியை காண்பித்து பிரசாரம் செய்யப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த அணியினர் மன்னிப்பு கோரி இருந்தனர். அந்தப் பரப்புரையில், முன்னாள் அமைச்சரும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மாஃபா.பாண்டியராஜன் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், தேசியக்கொடியை தவறாக பயன்படுத்தி பிரசாரம் செய்ததற்காக, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பன்னீர்செல்வம் அணியினர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, அவர் உள்பட அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து இன்று மாபா பாண்டியராஜனைக் கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாயுள்ளன. அதே நேரத்தில் இவ்வழக்கில் இருந்து தப்புவதற்காக பாண்டியராஜன் முன் ஜாமீன் கேட்டு மனு செய்திருப்பதாகவும் தெரிகிறது.