ராயப்பேட்டை கட்சி ஆபிஸ்ல இருக்க சசிகலா படத்தை உடனே தூக்கனும்….மதுசூதனன் எச்சரிக்கை…

 
Published : Apr 25, 2017, 09:32 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
ராயப்பேட்டை கட்சி ஆபிஸ்ல இருக்க சசிகலா படத்தை உடனே தூக்கனும்….மதுசூதனன் எச்சரிக்கை…

சுருக்கம்

Madusoodanan statement

ராயப்பேட்டை கட்சி ஆபிஸ்ல இருக்க சசிகலா படத்தை உடனே தூக்கனும்….மதுசூதனன் எச்சரிக்கை…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் படத்தை உடனடியாக அகற்றி அதன் புனிதத்தை காக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக  இரண்டாக பிளவுப்பட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்துள்ளது. அதிமுகவுக்கு மீண்டும் இரட்டை இலை சின்னம் கிடைக்க இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இரு அணிகளும் இணைவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சசிகலா குடும்பத்தினரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும், ஜெ மரணம் தொடர்பான நீதி விசாரணை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் நிபந்தனை விதித்துள்ளனர்

இந்நிலையில், அதிமுக தலைமை கழகத்தில் இருந்து சசிகலா படத்தை உடனே அகற்ற வேண்டும் என்று ஓபிஎஸ்  அணியினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சசிகலாவின் புகைப்படங்களை அனைத்திந்திய அதிமுக  தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்