மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலத்துக்கு காவி கலரா !! கொதித்தெழுந்த திமுக எம்எல்ஏ !!

By Selvanayagam P  |  First Published Jun 24, 2019, 8:59 PM IST

மதுரையில் புகழ்பெற்ற பழம்பெருமை வாய்ந்த ஆல்பர்ட் விக்டர் பாலத்துக்கு காவி வண்ணம் பூசப்படுவதற்கு திமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மக்கள் வரிப்பணத்தில் ஒரு அரசியல் கட்சியின் சாயலில் வண்ணம் பூசப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.பானிவேல் தியாகராஜன் கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.


மதுரையின் சிறப்புகளுள் ஒன்றாக கருதப்படுவது வைகை ஆற்றை இரண்டாக பிரிக்கும் ஆல்பர்ட் விக்டர் பாலம். மதுரையில் குறுக்காக ஓடும் வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் பழமை வாய்ந்தது.

இந்தப் பாலம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அந்த மாநிலத்தில் உள்ள அரசு கட்டங்கள் , பள்ளிகள், சிறைகள் என அனைத்து கட்டங்களுக்கும் காவி வண்ணம் பூசப்பட்டதைப் போன்று ஏவி பாலத்துக்கும் தற்போது காவி வண்ணம் பூசப்பட்டு வருகிறது.

Latest Videos

இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு மதுரை மத்திய  தொகுதி சட்டமன்ற உறுப்பினர், பி.டி.ஆர்,பழனிவேல் தியாகராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் பழமை வாய்ந்த ஆல்பர்ட் விக்டர் பாலத்தில் காவி வண்ணம் பூசப்படுவது, தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அது ஒரு அரசியல் கட்சியின் வண்ணத்தைக் குறிக்கிறது என்றும் அவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே திமுகவின் எதிர்ப்பு காரணமாக காவி வண்ணம் பூசப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

click me!