அமைச்சராக முயற்சிக்கும் மதுரை விஐபி... எடப்பாடியின் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருப்பு!

By Asianet TamilFirst Published Aug 11, 2019, 3:33 PM IST
Highlights

ஜெயலலிதா அமைச்சரவையிலேயே அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகியும் அமைச்சர் பதவி இன்னும் அவருக்குக் கிடைக்கவில்லை.  இன்னும் சுமார் ஒன்னேமுக்கால் ஆண்டு மட்டுமே அமைச்சரவையின் பதவிக்காலம் உள்ள நிலையில், அதற்குள் அமைச்சராகிவிட வேண்டும் என்றும் அவர் முனைப்புக் காட்டிவருகிறார்.

தமிழக அமைச்சரவையில் இரு காலியிடங்கள் உள்ள நிலையில் அந்தப் பதவியைப் பிடிக்க மதுரையைச் சேர்ந்த விஐபி முயற்சி செய்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையிலிருந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த மணிகண்டன் நீக்கப்பட்டார். அவர் வகித்துவந்த பொறுப்பு வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல கடந்த ஜனவரியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டியின் பதவி, வழக்கு ஒன்றில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் பறிபோனது. இவர் வகித்துவந்த பொறுப்பு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கப்பட்டது.


தற்போது அமைச்சரவையில் இரு பணியிடங்கள் காலியாக இருப்பதால், அந்தப் பொறுப்புகளுக்கு புதிதாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டபிறகு அந்த எதிர்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே அமைச்சர் பதவியைப் பிடிக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த விஐபி ஒருவர் பதவியைப் பெற காய் நகர்த்திவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலகிருஷ்ணா பதவி காலியானபோது அந்த இடத்தைப் பிடிக்க அவர் முயற்சித்தார். ஆனால், அது நடக்கவில்லை. மாறாக, அவருடைய மகனுக்கு எம்.பி. சீட்டுக் கொடுத்து அவரை சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியானது. தற்போது மணிகண்டன் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, மதுரையைச் சேர்ந்த உதயகுமாருக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்தப் பதவியைப் பிடிக்க அவர் காய் நகர்த்திவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அவர் முதல்வரிடம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா அமைச்சரவையிலேயே அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகியும் அமைச்சர் பதவி இன்னும் அவருக்குக் கிடைக்கவில்லை.  இன்னும் சுமார் ஒன்னேமுக்கால் ஆண்டு மட்டுமே அமைச்சரவையின் பதவிக்காலம் உள்ள நிலையில், அதற்குள் அமைச்சராகிவிட வேண்டும் என்றும் அவர் முனைப்புக் காட்டிவருவதாக அவருடைய ஆதரவாளர்களும் தெரிவிக்கிறார்கள். 

click me!