மதுரை எம்.பி.க்கு வந்த சோதனை... அலுவலகம் கொடுக்காமல் அலையவிடும் அவலம்!

By Asianet Tamil  |  First Published Jul 29, 2019, 11:20 AM IST

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி. வெங்கடேசன், அதிமுக வேட்பாளரை 1.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவர் வெற்றி பெற்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், மதுரையில் மக்களைச் சந்திக்கும் வகையில் அவருக்கு அரசு அலுவலகம் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 


மதுரையில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. வெங்கடேசனுக்கு அரசு கட்டிடம் கிடைக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி. வெங்கடேசன், அதிமுக வேட்பாளரை 1.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவர் வெற்றி பெற்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், மதுரையில் மக்களைச் சந்திக்கும் வகையில் அவருக்கு அரசு அலுவலகம் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்தமுறை மதுரை எம்.பியாக இருந்த அதிமுகவின் கோபாலகிருஷ்ணன், தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தைப் புதுப்பித்து, அதை எம்.பி. அலுவலமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்.


தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அந்த அலுவலகம் பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்து எம்.பி.யாக சு. வெங்கடேசன் தேர்வான பிறகு, அந்தக் கட்டிடத்தில் மக்களைச் சந்தித்து குறைகளை கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு இதுவரை அந்தக் கட்டிடத்தை ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அக்கட்டிசம் மாநகராட்சி கட்டிடம் என்பதால், அதைப் பயன்படுத்திக்கொள்ளக் கோரி மாநகராட்சி நிர்வாகத்தை வெங்கடேசன் அணுகியும் இருக்கிறார்.
ஆனால், அந்தக் கட்டிடம் உள்ள இடத்தில் வணிக வளாகம் வரப்போவதாகச் சொல்லி, அங்கு இடம் கிடையாது என்று மாநகராட்சி நிர்வாகம் சொல்லாமல் சொல்லிவிட்டதாக தகவல்கள் உலா வருகின்றன. இதனால், வெங்கடேசனுக்கு கட்டிடம் ஒதுக்காத விஷயத்தில் அரசியல் இருப்பதாகவும், இதுதொடர்பாக விரைவில் அவர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள்  தோழர்கள்.

Tap to resize

Latest Videos

click me!