திமுகவுக்கு எதிராக ஆதீனங்கள்..முட்டுக்கட்டை போடும் தருமபுரம் ஆதீனம்.! அப்செட்டில் இந்து அமைப்புகள்.!

By Raghupati R  |  First Published May 6, 2022, 11:11 AM IST

தமிழகத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகள் என்பவை பல நூறு ஆண்டுகளாக இருக்கின்றன. ஆதீனங்கள் என்பவை இறை பணிகளுக்காக தமிழ் பணிகளுக்காக என்று தொடங்கப்பட்டாலும் காலம் அதனை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தியே வைத்திருக்கிறது. 


அடிமைத்தளைகளை தகர்த்து எறிந்து மனிதனுக்கு மனிதன் சமம் என்கிற மகத்தான சமூக நீதியை பேசுகிற தமிழ் நிலத்தில் சில, ஆதிக்க மனோபாவ ஆதீனங்களும் மடாதிபதிகளும் பேசுபொருளாக, கவனிப்பு பொருளாக இருக்கவில்லை. மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் சுவாமிகள், 'பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று. ஸ்ரீரங்கத்தில் கூட ஆச்சாரியருக்கு நடத்திய பிரவேசத்தை எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தினர். பட்டினப் பிரவேசத்தைத் தடுக்கக் கூடிய அருகதை எந்த அரசுக்கும் கிடையாது. 

Tap to resize

Latest Videos

எந்த இயக்கத்துக்கும் கிடையாது.இந்து தர்மத்துக்கு எதிரான துரோகிகளை... தேசத் துரோகிகளாக கருதி எச்சரிக்கை விடுக்கிறேன். இந்து விரோதமான செயல்களை கடைபிடித்தால் ஆளுங்கட்சியின் எந்த ஒரு அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் சாலையில் நடமாட முடியாது' என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.மதுரை வந்த ஆதீனத்தை நேற்று காலை நேரில் சென்று சந்தித்த எந்த செய்தியாளரிடமும் அவர் பேட்டியளிக்க தற்போது விரும்பவில்லை என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். 

இதுபற்றி சிலரிடம் விசாரித்தோம், ‘தங்கள் மடம் சார்ந்த இந்த விவகாரம் இந்த அளவுக்கு பரபரப்பான அரசியல் ஆக்கப்படுவதை தருமபுரம் ஆதீனம் சுத்தமாக விரும்பவில்லை என்கிறார்கள். தமிழக அரசிடம் இது குறித்து பேசி ஒரு முடிவு எடுக்கலாம் என்று அவர் ஏற்கெனவே முடிவு செய்து இருந்தார். இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் அவருடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. 

இருதரப்பும் கலந்து பேசி இதில் ஒரு சுமுகமான முடிவை எட்டி விடலாம் என்பதே தருமபுர ஆதீனத்தின் எண்ணமாகவும், விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால் மதுரை ஆதீனம் உள்ளிட்டவர்களும் இந்து அமைப்புகளும் இது தெரியாமல் பொங்கியதும், இதனை திமுகவுக்கு எதிரான மிகப்பெரிய பிரச்சினையாக ஆக்குவதையும் ஆதீனம் விரும்பவில்லை. எனவே தன்னை சந்திக்க வந்த மதுரை ஆதீனத்திடம் இது குறித்து அவர் விளக்கமாக எடுத்துக் கூறி இந்த விஷயத்தில் தாங்கள் எந்த கருத்தையும் இனிமேல் தெரிவிக்க வேண்டாம் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம்.

தனது தலைமை குரு பீடமாக கருதும் தருமபுர ஆதீனத்தின் உத்தரவை மீற முடியாமல் தன்னுடைய முயற்சிகளைக் கைவிட்டு மதுரை திரும்பிய மதுரை ஆதீனம், மடத்துக்குள் அடைக்கலமாகி விட்டார். இதனால் இந்த விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக ஆதீனங்களையும் மடங்களையும் இந்து மத அமைப்புகளையும் ஓரணியில் திரட்டும் மதுரை ஆதீனத்தின் முயற்சியானது தருமபுர ஆதீனத்தின் தடை உத்தரவால் தோல்வி அடைந்திருக்கிறது. மீண்டும் திமுக அரசுக்கு எதிராக ஆதீனங்களின் பிரச்னை எழுமா ? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க : அலெர்ட்.! இன்று தமிழகத்தில் மழை அடிச்சு ஊத்தப்போகுது மக்களே.! எங்கெல்லாம் தெரியுமா ?

இதையும் படிங்க : அச்சச்சோ..! உலகில் இந்தியாவில் தான் அதிக கொரோனா உயிரிழப்பு.. WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

click me!