
நீங்கள் என்ன என்னை நீக்குவது.. என்னை நீக்க சசிகலாவுக்கு தகுதி கிடையாது என மதுசூதனன் கூறியுள்ளார்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நீக்கப்பட்டதையடுத்து பேட்டியளித்த அவர் என்னை நீக்க சசிகலாவுக்கு தகுதி இல்லை என்று கூறினார்.
முதல்வர் ஓபிஎஸ்க்கு பெருகி வரும் ஆதரவில் உச்சகட்டமாக அவைத்தலைவர் மதுசூதனனே ஆதரவளித்தது சசிகலா தரப்பை அசைத்து பார்த்தது.
இதையடுத்து மதுசூதனன் மேல் ஆத்திரமடைந்த சசிகலா தரப்பு அவரை பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்கியது. இது பற்றி கருத்து தெரிவித்த மது சூதனன் அம்மாவால் அவை தலைவராக நியமிக்கப்பட்டேன். சசிகலா பொது செயலாளர் ஆக்கப்பட்டதே தவறான நடைமுறை.
கட்சியில் தற்காலிக பொது செயலளர் என்ற பொறுப்பே கிடையாது.
பொறுப்பே இல்லாதவர் என்னை நீக்க முடியாது. என்னை நீக்க அவருக்கு அதிகாரமும் இல்லை என்று ஆவேசமாக கூறினார்.