நீட் தேர்வு மசோதா.! விளக்கம் கேட்ட மத்திய அரசு.!தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமா..? மா.சுப்பிரமணியன் பதில்

Published : Nov 28, 2022, 12:05 PM ISTUpdated : Nov 28, 2022, 12:12 PM IST
நீட் தேர்வு மசோதா.! விளக்கம் கேட்ட மத்திய அரசு.!தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமா..? மா.சுப்பிரமணியன் பதில்

சுருக்கம்

அரசு மருத்துவமனைகள் என்றாலே சாதாரணமாக குற்றம்சாட்டிவிடலாம் என்ற ரீதியில் கேள்வி கேட்பதும் பேசுவதும் தவறு என்று என அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

உதயநிதி பிறந்தாள் கொண்டாட்டம்

திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சைதாப்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 13 குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் மற்றும் பரிசு பொருட்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதனை தொடர்ந்து பிறந்த குழந்தைகளுக்கு மா.சுப்பிரமணியன் பெயர் சூட்டினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதயநிதி பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நேற்று, நேற்று முன்தினம் இந்த மருத்துவமனையில் பிறந்த 13 குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது என்றும்  அடையாறு மகப்பேறு மருத்துவமனையில்  பிறந்த 9 குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளதாகவும், மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12 குழந்தைகளுக்கு என மொத்தம் 34  குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது கூறினார்.

காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடை மசோதா.! ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் மீண்டும் அதிகரிக்கும் ஆன்லைன் சூதாட்டம்..?


சீனாவில் அதிகரிக்கும் கொரான

சீனாவில் கொரோனா அதிகரிப்பால் சென்னை விமான நிலையங்களில் சோதனை தொடங்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு 2% ரேண்டம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அது தேவையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இந்தநிலையில்  சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏதாவது கட்டுப்பாடு விதிக்கும் நிலைக் குறித்து மத்திய  சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,  எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் எந்த அலட்சியும் இல்லை என்றும் குழந்தை இறந்தது இயற்கையாக நடந்த ஒன்று எனக் கூறினார்.

தவறான பாதையில் பயணிக்கும் திமுக..! தமிழகத்தில் 5000 இடங்களில் போராட்டம் நடத்த இலக்கு - அண்ணாமலை உறுதி

நீட் தேர்வுக்கு தடை கிடைக்குமா.?

அரசு மருத்துவமனைகள் என்றாலே சாதாரணமாக குற்றம்சாட்டிவிடலாம் என்ற ரீதியில் கேள்வி கேட்பதும் பேசுவதும் தவறு எனக் கொந்தளித்த அவர் எளிய மக்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கும் இடம் என தெரிவித்தார்.  நீட் விலக்கு மசோதா குறித்து பேசிய அவர்  குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பப்பட்டது, அதில் சில விளக்கம் கோரி தமிழக அரசிடம் கேட்டனர், அதற்கும் உரிய விளக்கம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் குடியரசு தலைவர் நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தருவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

இதையும் படியுங்கள்

அமைச்சரவையில் மாற்றமா..? உதயநிதிக்கு வாய்ப்பா..? மா. சுப்பிரமணியன் கூறிய புதிய தகவல்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!