என்.ஆர்.சி.யும் என்.பி.ஆரும் ஒன்னுதான்... மதங்களுக்கு இடையே பாகுபாடு... மு.க. ஸ்டாலின் புதிய குற்றச்சாட்டு!

By Asianet TamilFirst Published Dec 27, 2019, 7:58 AM IST
Highlights

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை கேரளா, மேற்கு வங்க மாநிலத்தில் நிறுத்திவைப்போம் என்று அந்தந்த மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளார்கள்.  ‘அரசியலுக்கு வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடாதீர்கள்” கேரள, மேற்கு வங்க மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்திருந்தார். இந்நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியுள்ளார்.  

தேசிய மக்கள் தொகை பதிவேடும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய குடியுரிமைத் திருத்த சட்டம் (என்.ஏ.ஏ.) ஆகியவற்றை காங்கிரஸ், திமுக, திரினாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்துவருகின்றன. தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தேறின. இந்நிலையில் ‘என்.பி.ஆர்.’ என்றழைக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த மக்கள் தொகை பதிவேட்டுக்காக ரூ 4 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை கேரளா, மேற்கு வங்க மாநிலத்தில் நிறுத்திவைப்போம் என்று அந்தந்த மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளார்கள்.  ‘அரசியலுக்கு வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடாதீர்கள்” கேரள, மேற்கு வங்க மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்திருந்தார். இந்நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியுள்ளார்.  
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவிட வேண்டியதன் அவசியம் என்ன? தேசிய மக்கள் தொகை பதிவேடும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மதங்களுக்குகிடையே பாகுபாடு மற்றும் வேற்றுமையை மக்கள் தொகை பதிவேடு உருவாக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!